ஊட்டியில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் 10-ந் தேதி நடக்கிறது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      நீலகிரி

ஊட்டியில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வரும் 10_ந் தேதி நடக்கிறது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு_

பத்தாம் வகுப்பு

ஊட்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10_ந் தேதி காலை 9 மணி முதல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் நிறுரனமும், கோவை ஸ்ரீ அபிராமி மருத்துவமனை நிறுவனமும் கலந்து கொண்டு தத்தமது நிறுவனங்களில் உள்ள பணிக்காலியிடங்களுக்கான தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். யுனைடெட் இந்தியா நிறுவனம் சார்பில் ஊட்டியிலுள்ள அதன் அலுவலகத்திற்கு வேண்டிய இன்சூரன்ஸ் அட்வைசர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான நேர்காணலில் 18 வயது நிறைவடைந்த குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
அதேபோன்று ஸ்ரீ அபிராமி மருத்துவமனைக்கு ஸ்டாப் நர்ஸ், நர்சிங் அசிச்டென்ட் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப உத்தேசித்துள்ளனர். இதற்கான நேர்காணலில் ஜெனரல் நர்ஸ், மிட்வைப், அசிஸ்டன்ட் நர்ஸ் போன்ற கல்வித்தகுதி கொண்ட நபர்கள் பங்குபெறலாம். மேலும் மருத்துவமனை இதர அலுவலகப் பணிகளுக்கென்று பட்டதாரிகளையும், ஓட்டநர் பணிக்கென்று பேட்ஸ் லைசென்ஸ் உரிமம் பெற்ற இளைஞர்களையும் தேர்வு செய்ய உள்ளனர்.

சுய விபரக்குறிப்பு

நேர்முகத்தேர்விற்கு வருபவர்கள் தவறாது தமது கல்விச்சான்றிதழ்களையும் தொடர்புதைய தகுதிச்சான்றுகளையும் சுய விபரக்குறிப்பையும் எடுத்துவருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இப்பணிகளுக்கான தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்கள் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இது தொடர்பான மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டரின் கூடுதல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து