முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா: சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் மண்டகப்படிக்கு எழுந்தருளி வீதியுலா

வியாழக்கிழமை, 3 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,-   ராமேசுவரம் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு விருந்து வைபவம் நிகழ்ச்சிக்கு கலந்துகொள்வதற்காக சுவாமி,அம்மன்,பெருமாள் ஆகிய சுவாமிகள் அலங்காரத்துடன்  தங்க கேடயத்தில் மண்டகப்படிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஜூலை 17 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் ஆடித்திருவிழா தொடங்கியது. திருக்கோயிலில் 17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் அலங்காரத்துடன் தினசரி ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி நடைபெற்றது.திருவிழாவில் முக்கிய நிகழச்சியான ஜூலை 28 ஆம் தேதி சுவாமி,அம்மன் திருக்கல்யாண உற்சவ  நிகழ்ச்சியும் திருக்கோயிலில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இத்திருவிழாவில் 17 ஆவது நாள் நிகழ்ச்சியையொட்டி சுவாமி,அம்மன்,பெருமாள் ஆகிய சுவாமிகள் விருந்து வைபவம் நிகழ்ச்சிக்காக ராமேசுவரம் திருக்கோயிலின் உபகோயிலான கெந்தமாதனபர்வதம் பகுதியிலுள்ள ராமர் பாதம் திருக்கோயில் மண்டகப்படிக்கு எழுந்தருளிய நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி   திருக்கோயிலில் அதிகாலை  2.30 மணிக்கு நடைகள் திறக்கப்பட்டது.பின்னர் 3 முதல் 5 மணி வரை ஸ்படிகலிங்க பூஜைகளும் தொடர்ந்து அதிகாலை 6 மணி வரை அதிகாலை பூஜைகளும் நடைபெற்றது.அதன் பின்னர்  சுவாமி,அம்மன்,பெருமாள் தங்க கேடயத்தில் திருக்கோயிலிருந்து  6 மணி்க்கு அலங்காரத்துடன் எழுந்தருளி நான்குரத வீதி,நடுத்தெரு,திட்டக்குடித்தெரு ஆகிய வீதிகள் வழியாக மண்டகப்படிக்கு காலை 11 மணிக்கு சென்றடைந்தது.அங்கு சுவாமி,அம்மனுக்கு மாவு விளக்கு பூஜைகளும்,நெய்வேத்திய பூஜைகளும், சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்து அருள்பெற்று சென்றனர்.இதையடுத்து சுவாமி,அம்மன் மாலை 6  மணி்க்கு மண்டகப்படியிலிருந்து  புறப்பாடகி திருக்கோயிலுக்கு இரவு 10 மணிக்கு வந்தடைந்ததையொட்டி நடைகள் திறக்கப்பட்டு அர்த்தசாம பூஜைகள் நடைபெற்றது.பின்னர் கோயில் நடைகள் அடைக்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணைஆணையர் மங்கையர்கரசி,உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன்,கோயில் அலுவலர் முத்துக்குமார்,நாகபாண்டி ஆகியோர்கள் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து