முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்ட கால்பந்து போட்டியில் வென்ற அணிக்கு பரிசு

வியாழக்கிழமை, 3 ஆகஸ்ட் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், மேற்கு ரோட்டரி சங்கம், குயின்சிட்டி ஆகியவை இணைந்து ஆண்களுக்கான கோபாலகிருஷ்ண நாயுடு நினைவு கால்பந்து போட்டியையும், பெண்களுக்கான காவேரியம்மாள் நினைவு கால்பந்து போட்டியையும் நடத்தியது. இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இறுதியில் ஆண்கள் பிரிவில் திண்டுக்கல் புனிய மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது. பெண்கள் பிரிவில் அனுமந்தராயன்கோட்டை லயோலா மகளிர் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தர்ராஜன், வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் ரூபா ஆகியோர் கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கினர். மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ஸ்டீபன், குயின்சிட்டி சங்க செயலாளர் கோகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து