முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா, ஈரான் நாடுகளுக்கு பொருளாதார தடை: அமெரிக்காவுக்கு ரஷ்ய பிரதமர் கண்டம்

வியாழக்கிழமை, 3 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க முடிவு செய்ததை அடுத்து அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பொருளாதார தடை

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா செயல்படுவதாகவும், சர்வதேச விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. இதனால் ரஷ்யாவுக்கும் இதே போல் தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது.

ரஷ்யா எதிர்ப்பு

இது தொடர்பான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபை, செனட் சபை ஆகியவற்றில் நிறை வேறியது. இதைத்தொடர்ந்து இந்த மசோதா மீது அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனால் 3 நாடுகள் மீதான பொருளாதார தடை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வதேவ் கூறியதாவது:-

வர்த்தக போர்

அமெரிக்கா எங்கள் நாடு மீது முழுமையான வர்த்தக போரை தொடங்கி உள்ளது. அது மட்டும் அல்லாமல் எங்கள் நாட்டை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவுடனான எங்களுடைய நட்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது, இருநாடுகளின் உறவை கடுமையாக பாதிக்கும். அது மட்டும் அல்ல, டிரம்ப் தலைமையிலான புதிய அரசு மீது எங்களுக்குள்ள நம்பிக்கையும் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா எங்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகள் இப்போது மட்டும் அல்ல, இன்னும் பல 10 ஆண்டுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு திமித்ரி மெட்வதேவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து