முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளுக்கு ஈரான் கடும் கண்டனம்

வியாழக்கிழமை, 3 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

தெஹ்ரான், அமெரிக்கா தற்போது விதித்துள்ள புதிய பொருளாதார தடைகள், 2015ம் ஆண்டு செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் கூறியுள்ளது.

ரஷ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்க முடிவு செய்தது. இதுதொடர்பான மசோதா, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிபர் டிரம்பும் கையெழுத்திட்டதையடுத்து அது சட்ட வடிவம் பெற்று நடைமுறைக்கு வந்துள்ளது.

மீறும் செயல்...

ஈரானின் ஏவுகணை திட்டம், மனித உரிமை மீறல்களை சுட்டிக் காட்டி அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதுபற்றி ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் அப்பாஸ் ஆராக்சி, அரசு தொலைக்காட்சியில் பேசும்போது, அமெரிக்காவின் புதிய பொருளாதார தடையானது உலக நாடுகளுடன் 2015-ம் ஆண்டு செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றார்.

‘அமெரிக்காவின் செயலுக்கு சரியான பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அமெரிக்க கொள்கை மற்றும் டிரம்பின் வலையில் நாங்கள் நிச்சயம் விழ மாட்டோம்’ என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து