முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கை வாக்கெடுப்பு: பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் வெற்றி

வியாழக்கிழமை, 3 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

பிரேசிலியா, பிரேசில் நாட்டு அதிபரான மைக்கேல் டெமர், பாராளுமன்ற கீழ் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

முறைகேடு புகார்

பிரேசில் நாட்டில் அதிபராக இருந்த டில்மா ரூசெப் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து துணை அதிபராக இருந்த மைக்கேல் டெமர் புதிய அதிபரானார். இவர்மீது கடந்த 2014-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது டில்மா ரூசெப்புக்காக தேர்தல் நிதி திரட்டுவதில் முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது. மேலும், பல ஊழல் புகார்களும் தெரிவிக்கப்பட்டன. இதனால் டெமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு

அவர்மீது, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், பாராளுமன்றத்தின் கீழ் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது. இதில் மொத்தமுள்ள 513 பேரில் மூன்றில் ஒரு பங்கான 171 பேரின் ஆதரவு கிடைத்தால் அவர் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதிபர் பதவி தப்பியது

இதையடுத்து, நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மைக்கேல் டெமருக்கு ஆதரவாக 263 பேரும், அவருக்கு எதிராக 227 பேரும் வாக்களித்தனர். மற்றவர்கள் சபைக்கு வரவில்லை. இதையடுத்து டெமரின் அதிபர் பதவி தப்பியது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிபர் மைக்கேல் டெமர் இந்த வெற்றியை பெரிதாக கொண்டாட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து