வரலெட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுவது ஏன்?

வியாழக்கிழமை, 3 ஆகஸ்ட் 2017      ஆன்மிகம்
VARALAXUMI 0

வரலெட்சுமி விரதம் என்பது பதினாறு வகை செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமி தேவியின் அருள் வேண்டி கடைபிடிக்கப்படும் நோம்பாகும். சுமங்கலிப் பெண்கள் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை தினத்தன்று தனது தாலி பாக்கியம் நிலைத்திடவும், கணவன் நல்ல ஆரோக்கியத்துடனும், வீட்டில் செல்வம் சேர்ந்திடவும் விரதம் கடைபிடிக்கின்றார்கள். விரதம் மேற்கொள்ளும் நாளில் வீட்டை நன்கு சுத்தம் செய்து விளக்கேற்றி பத்தி, சாம்பிராணி போட்டு நறுமணம் ஏற்றுவார்கள். கலசம் ஒன்றை எடுத்து, அதில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு ஆகியவற்றை போட்டு பட்டுத்துணியால் கலசத்தை அலங்கரிப்பார்கள். கலசத்தின் மேல் மா இலையுடன் தேங்காய் ஒன்றை வைப்பர். பின்பு தங்கம், வெள்ளி மற்றும் பஞ்சலோகத்தாலான லெட்சுமி உருவ படத்தை அல்லது காகிதத்தாலான லட்சுமி படத்தை வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர். இனிப்பு பலகாரங்கள் படைத்து தீபாராதனை காட்டி வழிபடுவர். கலசத்தில் வைத்துள்ள மஞ்சள் சரடை விரதம் இருந்தவர்கள் கையில் கட்டுவர். லட்சுமிக்கு படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம், மஞ்சள், குங்குமம், புடவை ஆகியவற்றை வந்திருந்த சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வர். நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்ததை முடித்துக் கொண்டு தாமும் உண்டு விரதத்தை முடிப்பர். அன்று முழுவதும் லலிதா சகஸ்ரநாமம், அஷ்டலட்சுமி தோத்திரம் பாராயணம் செய்வர். பிறகு மாலை வேலையில் உற்றார், உறவின் மற்றும் சுற்றத்தார் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் பெற்று மகிழ்வர்.
 
துளசி, மா, நெல்லி, வில்வம் போன்றவை லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இவைகள் இருக்கும் இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் நெல்லி தல விருட்சமாக உள்ளது. இங்கு அலமேலு மங்கை வெள்ளிக்கிழமை தோறும் அலமேலு மங்கைத் தாயார் சன்னதியில் கோ பூஜையுடன் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. இந்த நேரத்தில் மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கி நெற்றியில் திலகமிட்டுக் கொள்பவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்று சுமங்கலிப் பெண்களால் நம்பப்படுகிறது. ஆகையால் வெள்ளிக்கிழமை தோறும் இந்த சன்னதியில் பெண்கள் கூட்டம் அலைமோதும்.
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்

மலர்களில் சிறந்தது தாமரை. தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளார். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆகையால் அவளை மலர்மகள் என்பர். விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆகையால் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.
நெல்லி ஆயுளை வளர்க்கும், ஆரோக்கியம் தரும். அதனடியில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லி திருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயரும் உண்டு. நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால் தான் ஏகாதசிப் பலன் உண்டு. வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றினாள். வைணவத் தலமான ஸ்ரீரங்த்தில் தல விருட்சம் வில்வம். திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால் தான் அர்ச்சனை, வில்வமரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.

பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா.  பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் குடி கொண்டிருக்கிறார்கள். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும்.  புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் அண்டாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பார்கள். வாசலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினாலும் கிருமிகள் அண்டாது, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் தீரும். பஞ்சகவ்யம் பரம ஒளஷதம் என்பார்கள். யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள். வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடத்தில் லட்சுமி வாசம் செய்வாள்.


தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தற்கான பொருள். சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. அதில் மலர்மகள் வாசம் செய்கிறாள். தர்ம சிந்தனை உடையாரின் உள்ளத்திலும் லட்சுமி குடியிருப்பாள். சந்தனத்தில் மகாலட்சுமி இருக்கிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியங்களில் சந்தனம் அவசியம் வைத்திருப்பர். வேள்விப்புகை உயிர் காக்கும். வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப்புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும். பணிவுடனும், இன்சொல்லும் உடையவர்களிடத்திலும் திருமகள் குடியிருக்கிறாள். தூய கன்னியர்கள் தெய்வ நலம் பொலிபவர்கள். அவர்களித்தில் லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வதும் உண்டு. கலகமில்லாத மகளிர் வாழும் இடத்திலும் மகாலட்சுமி குடி கொண்டிருப்பாள். பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்கள் இடத்தில் லட்சுமி வாசம் செய்வாள். உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள் என்பார்கள். காலையில் எழுந்ததும் இரு கைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும். கை என்றாலே சக்தி என்று தான் பொருள். தூய்மையான ஆடை அணிகிறவர் இடங்களிலும் மகாலட்சுமி இருக்கிறாள். மிதமாக உண்பவர்களிடத்திலும், பகிர்ந்துண்டு வாழும் மனிதர்களிடத்திலும் லட்சுமி இருக்கிறாள்.

திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள்.  திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது.  திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படி திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.  தானியக் குவியல்களிலும்,  கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்களிலும்,

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து