முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களில் 6 கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள்

வெள்ளிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

  மதுரை, - 1000 படுக்கைகளையும், 45 சிறப்பு துறைகளையும் கொண்ட தென்தமிழகத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 6 கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகளை கடந்த 4 மாதத்தில் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்கள் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர். 5 நோயாளிகள் ஏற்கனவே சிகிச்சை முடிவடைந்து சென்று விட்ட நிலையில் ஒருவர் மட்டுமே இப்பொழுது சிகிச்சை பெற்றுவருகிறார். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மாற்று அறுவைசிகிச்சை குழுவில் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்கள் டாக்டர். மோகன் நரசிம்மன், டாக்டர். ஸ்ரீநிவாசன் இராமசந்திரன் மற்றும் மயக்கமருந்து நிபுணர் டாக்டர். மகாராஜன் ஆகியோர் உள்ளனர்.
 டாக்டர். எஸ். குருசங்கர், தலைவர், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை கூறியது: “இதன் மூலம் மீனாட்சி மிஷன் மருத்துவமனை  தென் தமிழகத்தில் மிகப்பெரிய கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெறுவதற்கான மையமாக மாறியுள்ளது. இந்த சாதனை மீனாட்சி மிஷன் மருத்தவமனையின் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளுக்கு கிடைத்த நற்சான்றாகும். மீனாட்சி மிஷன் மருத்தவமனையில் 1996லிருந்தே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுவருகிறது. கடந்த வருடம் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கல்லீரல், நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவைசிகிச்சைகள் மேற்க்கொள்வர்த்தக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் காரணமாக தென் தமிழகத்திலிருந்து வெளியூர்களுக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலேயே உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.
 மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் முதல் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை ஏப்ரல் 2017ல் நடைப்பெற்றது. அதை தொடர்ந்து மேலும் 5 அறுவைசிகிச்சைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. 4 கல்லீரல்கள் மூளைசாவு அடைந்த நோயாளிகளுடைய உறவினர்களின் ஒப்புதலுடன், மற்றவை வேறு மருத்துவமனைகளில் இருந்தும் பெறப்பட்டது.
 டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி, மருத்துவ இயக்குனர் & துறைத்தலைவர்,  இரைப்பை குடலியல் அறுவைசிகிச்சை துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை: “4 மாதங்களில் 6 கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் நடைப்பெறுவது எங்களுக்கு மிகவும் திருப்திகரமான சாதனையாக உள்ளது, ஏனெனில் இப்பகுதியில் உலகத்தர மாற்று அறுவைசிகிச்சை மையங்கள் குறைவாக உள்ளது. இந்த சாதனையின் மூலம் மீனாட்சி மிஷன் மருத்துவமனை தென் தமிழகத்தில் மிகப்பெரிய கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெறுவதற்கான மையமாக மாறியுள்ளது. சிறுநீரக செயலிழப்புக்கு மாற்றாக டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொள்வது போல் இல்லாமல், உயிர்க்கொல்லி கல்லீரல் நோய்களுக்கு கல்லீரல் மாற்று மட்டுமே ஒரே சிகிச்சையாக உள்ளது”.
 மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூளைசாவை அடையாளம் காணவும், உறுதி செய்யவும், நோயாளிகளின் உறவினர்களுக்கு ஆலோசனை வழங்கவும், அவர்களை உடலுறுப்பு தானத்திற்கு ஊக்குவிக்கவும், அவர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடையளிக்கவும் பிரத்தியேக வழிமுறைகளை பின்பற்றுகிறது.
 டாக்டர். மோகன் நரசிம்மன், மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை: “மூளைசாவு மற்றும் உடலுறுப்பு தானம் குறித்து  தொடர்ச்சியான விழிப்புணர்வுகள் மூலம் வரும் காலங்களில், உறுப்புகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கும், உறுப்புகள் கிடைக்ககூடிய அளவும் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மூளைசாவு அடைந்த நோயாளியின் உடலுறுப்பு தானம் மூலன் 8 நோயாளிகளை காப்பாற்றகூடும் (1 கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள், 1 இருதயம், 2 நுரையீரல்கள்). கணையம் மற்றும் குடல்களும் உபயோகப்படுத்தப்படும் எனில் மேலும் இரண்டு நோயாளிகள் பயனடையகூடும். இவ்வாறாக மூளைசாவு அடைந்த நோயாளி பத்து நோயாளிகளை காப்பாற்றக் கூடும்”.
மூளைசாவு அடைந்த நோயாளியின் உடலுறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் எப்பொழுதும் முன்னோடியாக திகழ்கிறது. 2000- 2008 நடைப்பெற்ற மாதிரித்திட்டத்தின் படி, தமிழ்நாடு அரசு மாநில உடலுறுப்பு தானத்திட்டத்தை (CTP) தொடங்கியுள்ளது. இதன் மூலம் திறமையான மற்றும் வெளிப்படையான உடலுறுப்பு தானம் மற்றும் பகிர்தல் நடைப்பெற்று வருகிறது. இன்று தமிழகம் முழுவதும் மூளைசாவு அடைந்தவரின் உடலுறுப்பு தானம் குறித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 வருகிற ஆகஸ்ட்13, 2017 அன்று உலக உடலுறுப்பு தான தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீனாட்சி மிஷன் மருத்தவமனை மாபெரும் நடைபயணத்தை நடத்த உள்ளது. 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து