முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய பதவிகளுக்கு மூன்று இந்திய வம்சாவளியினர் நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒருமனதாக ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசின் கீழ் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டதற்கு அந்நாட்டின் செனட் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க தூதராக ...

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் தனது நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினரை நியமித்து வருகிறார். அதன்படி, தற்போது அந்நாட்டின் எரிசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக நீல் சட்டர்ஜி, அமலாக்க பிரிவின் அறிவுசார் சொத்து ஒருங்கிணைப்பாளராக விஷால் ஆமீன் மற்றும் பெரு நாட்டிற்கான அமெரிக்க தூதராக கிருஷ்ணா அர்ஸ் ஆகிய இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருமனதாக ஒப்புதல்...

அமெரிக்காவின் தூதர் நிலையிலான பதவிகளில் நிக்கி ஹாலேவுக்கு அடுத்தப்படியாக கிருஷ்ணா அர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கண்டவர்களின் நியமனங்களுக்கு அந்நாட்டின் செனட் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து