முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் பிரதமராக அப்பாசி 10 மாதங்கள் நீடிப்பார்: நவாஸ் ஷெரீப் முடிவு

வெள்ளிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக ஷாகித் கான் அப்பாசி பத்து மாதங்கள் நீட்டிப்பார் என்று ஆளுங்கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.

இடைத் தேர்தல்

பனாமா கேட் ஊழல் புகாரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி இழந்தார். அதை தொடர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்த ஷாகித் ககான் அப்பாசி இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது நவாஸ் ஷெரீப் போட்டியிட்ட லாகூர் எம்.பி. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் 17-ந்தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

எனவே, அதில் நவாஸ் செரீப் தனது தம்பியும், பஞ்சாப் முதல்வராக இருக்கும் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை போட்டியிட செய்து 45 நாளில் பிரதமராக்க முடிவு செய்து இருந்தார். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் லாகூரை அடுத்த முர்ரேவில் சாங்லா காலி பகுதியில் உள்ள ஷெஹ்பாஸ் ஷெரீப் வீட்டில் நடந்தது. இதில் பங்கேற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் பிரிவு) கட்சியின் நிர்வாகிகள் மற்றும் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கட்சி நிர்வாகிகள்

பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து ‘‌ஷெஹ்பாஸ் ஷெரீப்பை நீக்கி விட்டு அனுபவம் இல்லாதவரை அப்பதவியில் அமர்த்துவது சரியாக இருக்காது. ஏனெனில் பஞ்சாப் மாகாணம் தங்களது கட்சிக்கு சாதகமான பகுதி அங்கிருந்துதான் அதிக எம்.பி.க்கள் வெற்றி பெற முடியும். எனவே ஷெஹ்பாஸ் ஷெரீப் பிரதமராவதை விட பஞ்சாப் முதல்வரகாகவே நீடிப்பதே சிறந்தது என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அப்பாசியே பிரதமராக...

அதை நவாஸ் ஷெரீப் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. எனவே அப்பாசியே எஞ்சிய 10 மாதங்களுக்கும் பிரதமராக நீடிக்கிறார். மேலும் ஷெஹ்பாஸ் ஷெரீப்புக்கு பதிலாக அவரது மகன் ஹம்சாவை பஞ்சாப் முதல்வராக திட்டமிடப்பட்டிருந்தது. அது நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம்நவாசுக்கு பிடிக்கவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் 2 பெரும் பதவிகளில் இருப்பதை அவர் விரும்பவில்லை. எனவே அப்பாசியையே தொடர்ந்து பதவி வகிக்க செய்வதற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும் ஷெஹ்பாஸ் ஷெரீப், பிரதமர் அப்பாசி ஆகியோருடன் நவாஸ் செரீப் இதுகுறித்து ஆலோசித்து வருகிறார். எனவே இடைத்தேர்தல் ஷெஹ்பாஸ் ஷெரீப் போட்டியிடுவாரா? என்பது குறித்து இறுதி முடிவு இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து