முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைய வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

சனிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் :  பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அந்தோணியோ கட்டர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.


உலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்யவதில்லை. அதேசமயத்தில் பருவத்தில் வெய்யிலும் அடிப்பதில்லை. மேலும் மழையானது ஒரு இடத்தில் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மற்றொரு இடத்தில் மழை பெய்வதில்லை. மேலும் சமசீராக மழை பெய்வதில்லை.

இதற்குகாரணம் பூமியில் வெப்பம் அதிகமாகி வருவதுதான். மோட்டார் வாகனங்கள் அதிகரிப்பு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் உஷணம் ஆகியவைகளும் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணமாகும்.

இதனால் புவி வெப்பமயமாகுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு கொடுக்க முடிவு செய்தன. இதன் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தமானது அதே ஆண்டு நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

ஒப்பந்தப்படி புவியில் 2 டிகிரி செல்சியஷ் வெப்பத்தை குறைக்க அனைத்து நாடுகளும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். அவர் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்தார். அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் முதலில் எச்.1 பி விசா மீது நடவடிக்கை எடுத்தார். இதனால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக பாரீஸ் பருவநிலை ஒப்பந்தமானது சீனாவுக்கும் இந்தியாவுக்கும்தான் பயனுள்ளதாக இருக்கிறது.

அதனால் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இதற்கான விண்ணப்பத்தை ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள அமெரிக்க தூதர் மூலம்  அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இதற்கிடையில் உலக நலன் கருதி பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சபை பொதுச்செயலாளர் அந்தோணியா கட்டர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக அளவில் வெப்பத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

உலகத்தில் ஸ்திரமான வளர்ச்சிக்கும் காலநிலைக்கும் அமெரிக்கா தலைமை நாடாக இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் அதன் விளைவு தற்போது ஏற்பட்டுக்கொண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கும் வருங்கால சந்ததிகளுக்கும் ஒரு நிலையான பருவநிலையை உருவாக்குவதில் உலக நாடுகள் ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்காவும் இதில் இணைய வேண்டும் என்றும் கட்டரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாரிஸ் ஒப்பந்தப்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடானது குறைந்தது 3 ஆண்டுகளாவது ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும். அதன் பின்னர் எப்போது வேண்டுமானாலும் விலகிக்கொள்ளலாம். ஆனால் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு இன்னும் 3 ஆண்டுகள் ஆகவில்லை. வரும் 2019-ம் ஆண்டுடன்தான் 3 ஆண்டுகள் முடிவடைகின்றன. 3 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் அமெரிக்கா இந்த விலகல் அறிவிப்பை அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து