முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ருவாண்டா அதிபர் தேர்தலில் 3-வது முறை பால் ககாமே வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

ருவாண்டா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்  இப்போதைய அதிபர் பால் ககாமே. இவருக்கு வயது 59 ஆகும்.

ருவாண்டாவில் 7 ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் அதிபர் ககாமே உட்பட 3 பேர் போட்டியிட்டனர். ககாமே சுமார் 98 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்துஆதரவாளர்கள் மத்தியில் ககாமே பேசும்போது, “நாட்டு மக்கள், எனக்கு ஆதரவளிக்காதவர்கள் உட்பட அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார். ருவாண்டாவில் நடந்த இனக் கலவரத்தில் 8 லட்சம் பேர் பலியாயினர். இந்த வன்முறை 1994-ல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு பால் ககாமே தொடர்ந்து அதிபராக இருந்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து