முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம்: ஐ.நா.விடம் அமெரிக்கா எழுத்துப்பூர்வமாக தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க் : பாரிஸ் பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ஐ.நா.விடம் அமெரிக்கா எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளது.

கடந்த 2015 டிசம்பரில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஐ.நா. மாநாட்டில் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்தது.

இந்நிலையில் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஜூன் 1-ம் தேதி அறிவித்தார். இந்த நிலைப்பாட்டை ஐ.நா.விடம் அமெரிக்கா நேற்றுமுன்தினம் எழுத்துபூர்வமாக தெரிவித்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து 2019 நவம்பர் 4-ம் தேதி வரை எந்த நாடும் அதிகாரபூர்வமாக வெளியேற முடியாது. அதன்பிறகே ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும். அதற்கு ஓராண்டு காலம் வரை ஆகலாம். எனினும் 2020-ல் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு புதிய அதிபர் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவிக்கலாம் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து