முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

 தேனி -தேனி கொண்டு ராஜா உயர்நிலைப்பள்ளி, கம்மவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-ஐஐ(யு) பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வு மையங்களை  பணிகள்  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தலைமையில் நடைபெற்றது.
ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில்  தொகுதி-ஐஐ(யு) தேர்வு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்றது. தேனி வட்டத்தில் 22 பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 29 மையங்களும், பெரியகுளம் வட்டத்தில் 8  பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 9 மையங்களும், உத்தமபாளையம் வட்டத்தில் 11 பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 13 மையங்களும், என மொத்தம் மாவட்டத்தில் 3 வட்டத்தில் 41 பள்ளி மற்றும் கல்லூரிகளில் 51 மையங்கள் அமைக்கப்பட்டு, 10,920  தேர்வாளர்கள் தேர்வு எழுதினார்கள்.
தேனி வட்டத்தில் தேனி வட்டத்தில் விண்ணப்பித்த 7,969 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 5,937 தேர்வாளர்கள் தேர்வு எழுதினார்கள். 2,032 தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. பெரியகுளம் வட்டத்தில் விண்ணப்பித்த 2,595 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 2,019 தேர்வாளர்கள் தேர்வு எழுதினார்கள். 576 தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. உத்தமபாளையம் வட்டத்தில் விண்ணப்பித்த 3,984 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 2,964 தேர்வாளர்கள் தேர்வு எழுதினார்கள். 1,020 தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. என மொத்;தம் 14,548 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 10,920 தேர்வாளர்கள் தேர்வு எழுதினார்கள். 3,628 தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
இத்தேர்வினை கண்காணித்திட தேனி வட்டத்திற்கு 29 தணிக்கை அலுவலர்களும், 8 திடீர் தணிக்கை அலுவலர்களும், 6 பறக்கும்படை அலுவலர்களும், 29 தலைமை அறை கண்காணிப்பு அலுவலர்களும், 399 அறை கண்காணிப்பு அலுவலர்களும், பெரியகுளம் வட்டத்திற்கு 9 தணிக்கை அலுவலர்களும், 2 திடீர் தணிக்கை அலுவலர்களும், 2 பறக்கும்படை அலுவலர்களும், 9 தலைமை அறை கண்காணிப்பு அலுவலர்களும், 130 அறை கண்காணிப்பு அலுவலர்களும், உத்தமபாளையம் வட்டத்திற்கு 13 தணிக்கை அலுவலர்களும், 4 திடீர் தணிக்கை அலுவலர்களும், 3 பறக்கும்படை அலுவலர்களும், 13 தலைமை அறை கண்காணிப்பு அலுவலர்களும், 200 அறை கண்காணிப்பு அலுவலர்களும், என மொத்தம் 3 வட்டத்திற்கும் 51 தணிக்கை அலுவலர்களும், 14 திடீர் தணிக்கை அலுவலர்களும், 11 பறக்கும்படை அலுவலர்களும், 51 தலைமை அறை கண்காணிப்பு அலுவலர்களும், 729 அறை கண்காணிப்பு அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், ஒரு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு காவலர் வீதம் 51 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 51 காவலர்களும் மற்றும் ஒரு வீடியோ ஒளிப்பதிவாளர் வீதம் 51 வீடியோ ஒளிப்பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற இத்தேர்வானது ஒளிவுமறைவு அற்ற முறையில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் நேர்மையான முறையில் தேர்வு நடைபெற்றது என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து