முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் பகுதி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 28 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிரந்த 28 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
     ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கெந்தமானபர்வதம் பகுதியில் ஒரு வீட்டில் கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பஞ்சாட்சரம் என்பவரின் மகன் முனியசாமி(வயது50) என்பவரின் வீட்டில் உயிருடன் வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கடல் அட்டைகளையும், பதப்படுத்தி வைத்திருந்த 8 கிலோ கடல் அட்டைகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முனியசாமியை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். வில்லாயுதம் என்பவரிடம் இருந்து இந்த கடல்அட்டைகளை வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். முனியசாமியிடம் பறிமுதல் செய்த உயிருடன் இருந்த கடல் அட்டைகளை வனத்துறையினர் பத்திரமாக எடுத்து சென்று பாம்பன் கடலில் விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து