முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11ஆயிரத்து 327 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வினை 11 ஆயிரத்து 327 பேர் எழுதினர்.
     தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தொகுதி-2 தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களான, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி,அலங்கார மாதா மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் புனித ஆந்திரேயா மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தேர்வுமையங்களை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-2  உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பதவிகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. இத்தேர்வில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தில் மொத்தம் 14ஆயிரத்து 662  நபர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. அவர்களில் 11ஆயிரத்து 327 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வில் 77.25 சதவிகிதம்; தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வானது மாவட்டத்தில் மொத்தம் 45 இடங்களில் உள்ள 54 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
 தேர்வின் போது முறைகேடுகள் ஏதும்  நடக்காமல் தடுத்திடும் வகையில் பறக்கும் படை குழு மற்றும் நிறுத்தும் படை குழு உள்ளிட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.   மேலும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒளிப்பதிவு செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர தேர்வு எழுதும் நபர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி , பேருந்து வசதி உள்ளிட்ட  அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இத்தேர்வினை கண்காணித்திட மாவட்டத்தில் 11 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுபணிகளில் வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு தேர்வு அறையிலும் வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் அடங்கிய முத்திரையிடப்பட்ட உறைகளைப் பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இத்தேர்வானது காலை 10 மணிமுதல் துவங்கி  அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் வட்டாட்சியர் நா.சண்முகசுந்தரம், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து