முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

அழகர் கோவில் -மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாத பௌர்ணமியில் தேரோட்ட திருவிழா தனி சிறப்பானதாகும்.  இந்த விழாவானது கடந்த மாதம் 30 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் தினமும் மாலையில் அன்னம், சிம்மம், அனுமான், கருடன், சேஷ, குதிரை, உள்ளிட்ட பல வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா நேற்று நடந்தது இதில் அதிகாலையில் சுமாமி தேருக்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத, கள்ளழகர் என்ற சுந்தரராச பெருமாளுக்கு சிறப்பு பூ¬ஐகள் தீபாராதனை நடந்தது. காலை 9.5 மணிக்கு அதிர் வேட்டுகள் முழங்க பக்தர்கள் திருத்தேரின் வடங்களை பிடித்து இழுத்து சென்றனர். தேருக்கு முன்பாக கோவில் யானை கல்யாண சுந்தரவள்ளி சென்றது அதை தொடர்ந்து பக்தர்கள் கையில் தீபந்தம் பிடித்து உடம்பெல்லாம் சந்தனம் பூசி மற்றொரு கையில் சாமி ஆடி சென்றனர். பின்னர் 11 மணிக்கு திருத்தேர் நிலைக்கு நின்று இருப்பிடம் சேர்ந்தது. இந்த திருவிழாவைக் காண சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அழகர் மலை உச்சியில் உள்ள நு£புரகங்கையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை வணங்கினர். வழியில் உள்ள ஆறாவது படை வீடு சோலை மலை முருகன் கோவில், மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர். மாலையில் பூப்பல்லக்கு உற்சவம் அழகர் கோவிலில் நடந்தது.
இந்த தேரோட்ட திருவிழாவில் முன்னதாக கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மேலு£ர் தொகுதி பெரியபுள்ளான் எம்.எல்.ஏ, வெள்ளியங்குன்றம் ஜமின்ந்தார் சண்முகராஐ பாண்டிய புலிக்கேசி மற்றும் அறநிலையத்துறை, வருவாய் துறை, காவல் துறை, மருத்துவ துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று 8 ந்தேதி திருவிழா சாற்று முறை, நாளை 9 ந்தேதி உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து