திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எஸ் பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017      திருப்பூர்
bb

திருப்பூர்  மாவட்ட  ஆட்சியரக  பெருந்திட்ட  வளாகத்தில்  மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம்   மாவட்ட  கலெக்டர் டாக்டர். கே.எஸ் பழனிசாமி    தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும்  முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 295 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை  மேற்கொள்ள  சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  மாவட்ட கலெக்டர்  உத்தவிட்டார்.

காசோலை

தொடர்ந்து, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாநில நோயாளர் நிதியிலிருந்து  மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 1 பயனாளிக்கு ரூ.25,000/- த்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர்  டாக்டர். கே.எஸ் பழனிசாமி    வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  ச.பிரசன்னா ராமசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர்  சுகவனம்  மற்றும் தனித்துணை கலெக்டர்கள்  உள்ளிட்ட அனைத்து  அரசுத்துறைகளின் அலுவலர்கள் உட்பட  பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து