முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றம் நீதியரசர் நூட்டி இராம மோகன ராவ், அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தனர்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தினை  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் நூட்டி இராம மோகன ராவ் ,  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் , ஆகியோர்   திறந்து வைத்தார்கள்.  இவ்விழா விழுப்புரம் மீனாட்சி ஆறுமுகம் மகாலில் நடைப்பெற்றது.விழாவில்,  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  பேசியதாவது:

 ரூ.632 கோடி ஒதுக்கீடு

கடந்த 8 மாத காலத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர்  நீதிமன்றங்களுக்கென புதிய கட்டடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணியாளர்களுக்கென ரூ.632 கோடி ஒதுக்கீடு செய்து, நீதித்துறைக்கென தனிகவனம் செலுத்தி, மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 8 மாதங்களில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், சங்கராபுரம், செஞ்சி ஆகிய இடங்களுக்குத் தேவையான நீதிமன்ற கட்டடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.171 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.   மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா  தேர்தல் அறிக்கையில் வழக்கறிஞர்களின் சேமநல நிதி ரூ.7 லட்சம் என அறிவித்தார்கள்.   அம்மா அவர்களின் இவ்வரசு அதனை அரசாணை பிறப்பித்து செயல்படுத்த உள்ளது.  மற்றும் விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குளிர்சாதன வசதி, இணை வசதி, உட்கட்டமைப்பு வசதி ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது.  நீதித்துறைக்கென எந்த கோரிக்கை வைத்தாலும் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து தருவதில் அம்மா அவர்களின் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அம்மா அவர்களின் அரசு, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் போன்றவற்றை நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.  விழுப்புரம் மாவட்ட பொறுப்பு நீதிபதி நீதியரசர் நூட்டி இராம மோகன ராவ் , விழுப்புரம் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.  மேலும் பார் கவுன்சில் செயல்பாட்டையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.  சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு என்ற அண்ணாவின் வாக்கின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  தெரிவித்தார்இவ்விழாவில், கலெக்டர் .இல.சுப்பிரமணியன், மாவட்ட முதன்மை நீதிபதி .பி.சரோஜினி தேவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து