முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த திட்டத்தையும் புதுவையில் தொடங்க கூடாது என்ற எண்ணத்தில் கவர்னர் செயல்பட்டு வருகிறார் அன்பழகன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      புதுச்சேரி

புதுவை சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 புதுவை கவர்னர் மற்றும் காங்கிரஸ்அரசின் மோதல் காரணமாக துறைமுக அபிவிருத்தி திட்டம், விமான போக்குவரத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நலத்திட்டங்களை செயல் படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. துறைமுகம் தூர்வாரும் பணியில் ஊழல் நடந்திருப்பதாக கவர்னர் குற்றம் சாட்டியுள்ளார். இதை நேரம் வரும்போது தெரியப்படுத்துவேன் என அமைச்சருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். துiமுகம் தூர்வாரும் பணிக்கு ஒப்புதல் கொடுத்தது கவர்னர் தான். இந்தப் பணியை மத்திய அரசின் துறைமுக தூர்வாரும் கழகம் தான் செய்து வருகிறது. அப்படி இருக்க இதில் என்ன ஊழல்நடந்துள்ளது? அப்படியே ஊழல் நடந்திருந்தாலும் வெளிப்படுத்தாமல் மறைப்பது குற்றமில்லையா? அதோடு தேவைப்பட்டால் ஊழலை கூறுவேன் என்று கவர்னர் கூறுவதும் சரிதானா? இது உள்நோக்கம் கொண்டதாக தெரியவில்லையா? விமான போக்குவரத்து திட்டத்திலும் ஊழல் நடந்திருப்பதாக கவர்னர் கூறியுள்ளார். விமான போக்குவரத்து திட்டம் தொடங்கும் முன்பு என்ன ஊழல் நடந்துள்ளது? எந்த திட்டத்தையும் புதுவையில் தொடங்க கூடாது என்ற எண்ணத்தில் கவர்னர் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. முறைகேடுகள் நடந்திருந்தால் அதன் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். கவர்னர் தன் பதவிக்கு ஏற்ப மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு வாய்க்கு வந்தபடி குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசக் கூடாது. உண்மையில் ஊழல் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து