கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருககோவில் ஆடி மாத பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

பொங்கல் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் அன்னை ஸ்ரீபத்திரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிமாத பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்  அதன்படி இந்தாண்டுக்கான பொங்கல் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு கணபதி ப+ஜை மற்றும் கும்ப கலசப+ஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாக விநாயகர் திருக்கோவிலில் இருந்து மங்கல பொருள்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடி மரத்திற்கு சிறப்ப+ஜைகள் நடைபெற்றது. இதன்பின்பு மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து உலக மக்கள் நன்மை, வெப்பம் தணிந்து மழை பெய்ய வேண்டி பெண்கள் கொடி மரத்திற்கு தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்;கள் கலந்து கொண்டனார். 10 நாள்கள் நடைபெறும் விழாவில் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  விழாவின முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா மற்றும் முளைப்பாரி, ஊர்வலம் வரும் 16ந்தேதி நடைபெறுகிறது


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து