தூத்துக்குடி மாவட்ட தருவைகுளத்தில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, கடம்பூர் செ.ராஜு ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மற்றும் செய்தி மற்றும்  விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆகியோர் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.இம்முகாமில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுதெரிவித்ததாவதுமறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் மக்கள் நல்வாழ்வை முன்னேற்றும் விதமாக ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே  தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகின்றது.   கிராமங்களில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சுகாதாரத்துறையின் மூலம் இதுபோன்ற சிறப்பு இலவச மருத்துவ முகாம்கள்; நடத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 15 மிகவும் பின்தங்கிய கிராமங்கள் தேர்தெடுக்கப்பட்டு, அவற்றில் இது போன்ற இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்கைகள் வழங்கப்படுகிறது. இம்முகாமில் நோய்களுக்கான பரிசோனை மற்றும் உடல் நலம் குறித்த ஆலோசனை வழங்கப்படுகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு  தெரிவித்தார்கள். இம்முகாமில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்ததாவது:ஏழை, எளியோருக்கு தரமான உரிய சிகிச்சை கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த  முதலமைச்சர் அம்மா  சுகாதாரத்துறை சார்பில் தமிழக முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. நமது தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை, எளிய பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற இலவச மருத்துவ முகாம்கள் மூலம் அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உரிய சிகிச்சைகள் அனைத்து அளிக்கப்பட்டு வருகிறது. தருவைக்குளம் அரசு மேல்நிலையில் முதலமைச்சரின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மகப்பேறு மருத்துவம், சக்கரை நோய், எலும்பு முறிவு மருத்துவம், கண் மருத்துவம், பொது நல மருத்துவம், சித்தா மருத்துவம், இச்சிறப்பு முகாமில் நடைபெற்று வருகிறது. நவீன பரிசோதனை கருவிகள் மூலம் கண், பல், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் கண்டறியப்படுகிறது. அவ்வாறு நோய்களை கண்டறியப்பட்டால் அவர்களுக்கு தேவையான உடனடி சிகிச்சைகளும், தொடர் சிகிச்சைகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 30 இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் 31 ஆயிரம் 849 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நுபுஊ 856 நபர்களுக்கும், ஸ்கேன் 1186 நபர்களுக்கு எடுக்கப்பட்டுள்ளது. 137 நபர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. நமது தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற பொதுமக்கள் இலவசமாக தரமான சிகிச்சை பெற்றிடவேண்டும் என்பது தான் இதுபோன்ற இலவச சிறப்பு மருத்துவ முகாம்களின் நோக்கமாகும். உங்கள் பகுதிகளில் நடைபெறும் இதுபோன்ற இலவச சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தவேண்டும் என  செய்தி மற்றும்  விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்தார்கள்.இம்முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜ், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் கு.உமாமகேஸ்வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், சிவபெருமாள், கோவில்பட்டி துணை இயக்குநர் மரு.போஸ்கோராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  டி.நவாஸ்கான் மற்றும் மருத்துவ துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து