முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவிக்குழு விற்பனை கண்காட்சி கலெக்டர் வெங்கடாசலம், துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

தேனி.-தேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில்   தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு (மகளிர் திட்டம்) நிறுவனத்தின்  சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சியினை (கல்லூரி சந்தை) மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   துவக்கி வைத்து பார்வையிட்டார்.
துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு கிராமப்புறங்களில் வாழ்கின்ற இளைஞர்கள், ஆதரவற்றவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றிட பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், தனிநபர் வருமானத்தைப் பெருக்குவதினால் குடும்ப பொருளாதாரம் உயரும், குடும்பப் பொருளாதாரம் உயர்ந்தால் ஒரு கிராமத்தின் பொருளாதாரமும், அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும் என்பதை தமிழக அரசு கருத்தில் கொண்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம் (மகளிர் திட்டம்)த்தின் மூலம்; கிராமப்புறங்களில் வாழ்கின்ற கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு தொழில் சார்ந்த பயிற்சியளித்து, தொழில் தொடங்கிட தேவையான உதவிகளைச் செய்து அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்தி பொருட்களை மேம்படுத்திட சந்தைப்படுத்தி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திகின்ற வகையில் விற்பனை கண்காட்சி (கல்லூரி சந்தை) நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தேனி மாவட்டத்தில், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக கண்காட்சி (கல்லூரி சந்தை) 08.08.2017 முதல் 10.08.2017  வரை நடைபெறவுள்ளது.
இந்த விற்பனை கண்காட்சியில் தேனி மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள 30 மகளிர் சுயஉதவிகுழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை அணிகலன்கள், அழகிய துணிப்பைகள், வாசனை திரவியங்கள், மென்பொம்மைகள், மகளிருக்கான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், அழகு சாதனப் பொருட்கள், பரிசுப்பொருட்கள், இயற்கை உணவுப் பொருட்கள், கைத்தறி புடவைகள், மூலிகை திரவியங்கள், கலைநயம் மிக்க ஒவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்டவை தரமானவையாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்யப்படுவதால் மகளிர் சுய உதவிக்குழுவினரை ஊக்கப்படுத்தும் விதத்தில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, மகளிர் திட்ட அலுவலர்  கல்யாணசுந்தரம்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்  பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி துணை முதல்வர் முனைவர்.ஆரோக்கியம் ததேயுஸ்  அருட்சகோதரி முனைவர்.சில்வியா  உதவித்திட்ட அலுவலர்கள்  முருகேசன்   தங்கபாண்டியன்   மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து