முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டவுன்ஹால் சார்பில் சுதந்திர தினவிழா விளையாட்டு போட்டிகள்: மாணவ,மாணவிகளுக்கு அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      வேலூர்

வருகிற ஆக் 15 சுதந்திர தின விழா தினத்தன்று பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு அரக்கோணம் டவுன்ஹால் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருப்பதுடன் மாணவர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுவிடுத்து உள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரின் மைய பகுதியில் தி டவுன்ஹால் அமைந்து உள்ளது. நூற்றாண்டை நோக்கி செல்லும் டவுன்ஹால்; நிர்வாகம்; சுதந்திர தினத்தன்று பல்வேறு வயது உடைய பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டிகளை நடத்தவும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்க நி;வாகத்தினர் முடிவு செய்து உள்ளனர்..

சுதந்திர தின விழா

இது தொடர்பாக தி டவுன்ஹால் தலைவர் எஸ்.ரவி, மற்றும் பொதுசெயலாளர் டாக்டர் எஸ்.பன்னீர்செல்வம் வெளியிட்ட பத்திரிக்;கை செய்தியில் கூறியிருந்தாவது. வருகிற ஆக் 15ந் தேதியன்று தி டவுன்ஹால் சார்பில் சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்ட்டாடத்தின் போது அரக்கோணம் நகரம், மற்றும் கிராமபுற பள்ளி மாணவர்கள் அவரவர் துறைகளில் சிறந்தவர்கள,; திறமையானவர்கள் என்பதனை வெளிபடுத்தும் வகையிலும், வழக்கம் போல் பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

ஆன்றைய தினத்தின் முதல் நிகழ்வாக காலை 8மணிக்கு அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில் பொதுசெயலாளர் டாக்டர்.எஸ்.பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றுகிறார். பின்னர் தொடங்கும் முதல் விளையாட்டு போட்டியாக ஓவியபோட்டி 9மணியளவில் துவங்குகிறது. ஷியாம்குமார், பூபதி, ஜெய்சங்கர் ஆகியோர் இதற்கான பொறுப்பாளர்களாகவும், ஆர்டிஸ்ட் புருஷோத்தமன் நடுவராகவும் பணியாற்ற உள்ளார். இளம் விஞ்ஞானி போட்டி காலை 10மணியளவில் துவங்கிறது. இதற்கு ரமேஷ், ரங்கதுரை(எ)காமேஷ், சிவபிரசாத்(எ)பாபு பொறுப்பாளர்களாகவும், வீரமணி, சதீஷ்குமார், வேல்குமார் ஆகியோர் நடுவர்களாகவும் பணியாற்ற உள்ளனர்.

காலை 11மணியளவில் வினாடி விடை போட்டிகளும், மாலை 3மணிக்கு நடைபெறும் யோகா போட்டிக்கு ரவீந்தர், நிர்மல்குமார், கண்பத் ஆகியோர் பொறுப்பாளர்களாகவும், மோகன், கண்ணன், சரவணன் ஆகியோர் நடுவர்களாகவும் பணியாற்ற உள்ளனர். மாலை 4மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் நடக்க இருக்கிறது. நைனாமாசிலாமணி, ஆர்.வெங்கட்டரமணன், கோவிந்தராஜ், குகன், பாலாஜிபாஸ்கர், ஆகியோர் பொறுப்பாளர்களாகவும், கண்ணன், பழனி ஆகியோர் நடுவர்களாகவும் பணியாற்ற உள்ளனர்.

மாலை 6மணி நடன போட்டியின் மாணவர் ஒற்றையர் பிரிவிற்கு பாலகணபதி, செல்வமும். மாணவிகள் ஒற்றையர் பிரிவிற்கு ராஜசேகர், சாய்குமாரும்;. குழு நடனத்திற்கு தேவன்பு, முனுசாமி, நாகராஜன், பாஸ்கர் ஆகியோர் பொறுப்பாளர்களாகவும், பார்த்திபன், இந்துஜா, ஜெயராமன், ஆகியோh நடுவர்களாகவும் பணியாற்ற உள்ளனர். மாலை 7.30 மணியளவில் பரிசளிப்பு விழா. இதில்; சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி மற்றும் டிஎஸ்பி குத்தலிங்கம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்கள். இறுதியாக சமூக நலப் பொறுப்பாளர் ஆர்.வெங்கட்டரமணன் அனைவருக்கும் நன்றி கூறுகிறார். இவ்வாறு வெளியிடப்பட்;ட பத்திரிக்;கை செய்தியில் கூறியிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து