முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை கலெக்டர் சிவஞானம் துவக்கி வைத்தார்.

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      விருதுநகர்
Image Unavailable

 - விருதுநகர்.- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை முழு தேங்காய் பாலிதார் திருமண மண்டபத்தில் மூன்றாவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள்  துவக்கி வைத்து, மூன்று பயனாளிகளுக்கு நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 807 மதிப்பிலான காசோலைகளையும், பிரதம மந்திரி நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 15 நெசவாளர்களுக்கு வங்கிகளிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் கடன் பெறுவதற்;கான ஆணைகளையும், இக்கடன் தொகையில் தலா ரூ.10 ஆயிரம் அரசு மானியம் தள்ளுபடிக்கான  அனுமதி ஆணையினையும் வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது :-
 தமிழ்நாடு அரசு, விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள நெசவுத்தொழிலை பாதுகாக்கும் பொருட்டு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மிகவும் பாரம்பரியம் மிக்க கைத்தறி தொழிலை பாதுகாத்திட ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் ஏழாம் நாள் தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கைத்தறி ஆடைகளை பயன்படுத்துவதை விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இவ்வருடம் மார்ச் மாதம் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளகாத்தில் அமைக்கப்பட்டு ரூ.1.58 லட்சம் கைத்தறி ஆடைகள் விற்பனையும், கலசலிங்கம் பல்கலை கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு ரூ.1.31 லட்சம் கைத்தறி ஆடைகள் விற்பனையும், வே.வ.வன்னியப்பெருமாள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு ரூ.1.43 லட்சம்  கைத்தறி ஆடைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
 நமது மாவட்டத்தில் தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் கைத்தறி ஜவுளி இரகங்களை விற்பனை செய்திட ரூ.30 லட்சம் விருதுநகர் சரகத்திற்கு குறியீடாக நிர்ணயம் செய்யப்பட்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 111 பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் வாயிலாக ரூ.30.23 லட்சம் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு குறியீடு எய்தப்பட்டுள்ளது.
 இக்கண்காட்சியில் விருதுநகர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டு 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் நேரடியாக பருத்தி சேலைகள், செயற்கைப்பட்டு ரக சேலைகள், அசல் பட்டு சேலைகள், பருத்தி வேஷ்டிகள், கைலிகள், துண்டுகள், பெட்சீட்டுகள், படுக்கை விரிப்புகள் போன்ற கைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இக்கண்காட்சிக்கு ரூ.10 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற கைத்தறி துணிகளை கொள்முதல் செய்து பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுகொண்டார்.
 இந்நிகழ்வின் போது, உதவி இயக்குநர்  மனோகரன் அருப்புக்கோட்டை நெசவாளர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து