முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவ மாணவிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி விகித்தத்தை அடைய வேண்டும்: கலெக்டர் சி.அ.ராமன் அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஐ.டி.பல்கலை கழகத்தில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான ஆற்றல் ஊட்டும் முகாமினை கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்து பேசியதாவது:-

தேர்ச்சி விகிதம்

 

வேலூர் மாவட்டத்தில் 196 உயர்நிலைப் பள்ளிகலும், 228 மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகிறது. இதில் 2016-2017ஆம் ஆண்டு 51,743 மாணவ மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதி 88.90 சதவிகிதமும், 44,200 மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதி 85 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 2 சதவிகிதம் 2016-2017 ஆம் ஆண்டு கூடுதலாக உள்ளது. மேலும் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை 100 சதவிகிதம் உயர்த்த மாணவ மாணவிகளுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் ஆற்றல் ஊட்டும் பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதலில் தமிழ் பாடத்தினை பயிற்றுவிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கான ஆற்றல் ஊட்டும் முகாம் நேற்று 08.08.2017 துவங்கப்பட்டள்ளது. இம்முகாம்கள் படிப்படியாக ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல், கணித அறிவியல் மற்றும் இதர பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசியர்களுக்கும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் நடைபெறும்.

இந்த ஆற்றல் ஊட்டும் முகாமில் மாணவர்களுக்கு எத்தகைய முறையில் பாட திட்டங்களை வழிவகுத்து படிக்க வைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் அமைய வேண்டும் என்றும், மாணவர்களின் கற்றல் புரிந்து படிக்கும் வகையில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் விளக்கமாக ஆசிரியர்களிடம் தெரிவிக்கப்படும். இம்முகாமை பயன்படுத்திக் கொண்டு மாணவ மாணவிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சி.அ.ராமன், ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

மேலும் மாணவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வம், அனைத்து மாணவர்களுக்கும் முன்னுரிமை, மற்ற மாவட்டங்களுடன் போட்டியிட்டு தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரித்தல் போன்றவற்றை லீட் 2020 அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கலைப்புலி எஸ்.தாமு இம்முகாமில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களின் மூலம் மாணவ மாணவிகளை ஊக்குவித்து அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் ஆலோசனைகளை ஆசிரியர்களுக்கு வழங்கினார். மேலும் பொது அறிவில் அமெரிக்காவுடன் போட்டியிடும் அளவிற்கு வேலூர் மாவட்ட மாணவ மாணவிகளை தயார்படுத்திட வேண்டும். வேலூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஒவ்வொரு துறையிலும் நன்றாக பயிலும் 2 மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து உயர்கல்வி பயில வி.ஐ.டி. பல்கலைக் கழகம் வழிவகை செய்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் வி.ஐ.டி.பல்கலை கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், நகைச்சுவை நடிகரும் லீட் 2020 அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கலைப்புலி எஸ்.தாமு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து