முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் கோவில் திருவிழாவில் 450 ஆடுகள், 1000 கோழிகளை கொண்டு பொதுமக்களுக்கு விடிய விடிய அசைவ விருந்து

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல்லில் நடந்த கோவில் திருவிழாவில் 450 ஆடுகள், 1000க்கும் மேற்பட்ட கோழிகளைக் கொண்டு அசைவ விருந்து தயார் செய்து விடிய விடிய பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் முத்தழகுபட்டியில் புனித செபஸ்தியார் கோவில் திருவிழா உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் 3 நாட்கள் திருவிழா நடைபெறும். திருவிழா சமயத்தில் நேர்த்திக்கடன் வைத்திருக்கும் பக்தர்கள் கோவிலுக்கு ஆடு, கோழி, காய்கறிகள், உணவு தானியங்கள் போன்றவற்றை காணிக்கையாக வழங்குவது வழக்கம். அவ்வாறு வழங்கும் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அசைவ விருந்து தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
அதன்படி கடந்த 2 நாட்களாக கோவிலுக்கு 450க்கும் மேற்பட்ட ஆடுகள் காணிக்கையாக செலுத்தப்பட்டன. மேலும் 1000க்கும் மேற்பட்ட கோழிகள், சேவல்களும் காணிக்கையாக வழங்கப்பட்டன. இவை அனைத்தும் நேற்று காலை முதல் உறிக்கப்பட்டு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, வெள்ளை சாதம், சாம்பார், ரசம், காய்கறி கூட்டு என பலவகை உணவுகள் தயார் செய்யப்பட்டன. ஆடுகள், கோழிகளை உறித்து வெட்டும் பணியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல் காய்கறிகள் வெட்டுவது, சமையல் செய்வது என அனைத்து பணிகளையும் ஆண்களும், பெண்களும் தாங்களாகவே முன்வந்து செய்தனர். ராட்சத அண்டாக்களில் தனித்தனியாக தயார் செய்யப்பட்ட உணவு மாலை 6 மணிக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இரவு முழுவதும் அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஊர் முழுக்க கமகம அசைவ விருந்து வழங்கப்பட்டதுடன் பாத்திரங்களிலும் பொதுமக்கள் உணவு வாங்கிச் சென்றனர். இத்திருவிழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்து உணவருந்தி சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து