தி.மலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு சட்ட ஆலோசனை கருத்தரங்கு

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      திருவண்ணாமலை
photo06

திருவண்ணாமலையில் உள்ள எஸ்கேபி பொறியியல் கல்லூரி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனைக் குழுவும் இணைந்து மாணவர்களுக்கு சட்ட ஆலோசனை கருத்தரங்கு நேற்று நடந்தது. இக்கருத்தரங்குக்கு கல்லூரியின் முதல்வர் வி.சுப்பிரமணிய பாரதி, தலைமை தாங்க மேலாண்மை தலைவர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார்.

கருத்தரங்கம்

கருத்தரங்கில் கலந்து கொண்ட மாவட்ட தலைமை நீதிபதியும் சட்ட ஆலோசனை குழுவின் தலைவருமான மகிழேந்தி, மாவட்ட துணை நீதிபதியும் சட்ட ஆலோசனை குழுவின் செயலாளருமான ராஜமோகன், சார்பு நீதிபதி முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கினர். பெண் கொடுமைகள், ஆதார், சட்டங்கள், சாலை விதிகள், இக்கால இளைஞர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுக்கு வழங்கினர்.


இதில் மேலாண்மை துறை ஆசிரியர்கள், மாணவர்கள், கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவி அலுவலர் எஸ்.சையத்ரசீத், தொகுத்து வழங்கினார். முடிவில் மேலாண்மை துறை உதவி பேராசிரியர் பிரதீப் பழனி நன்றி கூறினார்.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து