முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் 10,000 பணியாளர்கள் போர்கால அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்: கலெக்டர் வா.சம்பத், தகவல்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      சேலம்

 

சேலம் மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுhரி முதல்வர் டாக்டர்.கனகராஜ் முன்னிலையில் துணை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (08.08.2017) நடைபெற்றது.

கலெக்டர் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்துறை, இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மாவட்ட முழுவதும் நோய்தடுப்பு நடவடிக்கையில் முழு கவனம் செலுத்தி வருகிறது.

 

மேலும், சேலம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறையில் மட்டும் 2,595 தற்காலிக கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுத்திடும் பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களிலிருந்து 2 முதன்மை பூச்சியியல் வல்லுநர்கள், 4 முதுநிலை பூச்சியியல் வல்லுநர்கள், 11 இளநிலை பூச்சியியல் வல்லுநர்கள், 54 சுகாதார ஆய்வாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது 20 வட்டாரங்களில் 2,055 பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றுப்புறம் சுகாதாரம் பேணுவது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் மூலம் பல்வேறு பொது இடங்கள், மக்கள் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்டம் முழுவதும் கடந்த 30 நாட்களில் மட்டும் 5 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள்துறை, சுகாதாரத்துறை, ஓமியோபதித்துறை ஆகிய துறைகளில் மூலம் சேலம் மாவட்டத்தில் 10,000 பணியாளர்கள் டெங்கு நோய் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன் நோய் ஏற்படாமல் தடுப்பது குறித்த முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்தும் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.வளர்மதி, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.பூங்கொடி, வருவாய் கோட்டாட்சியர் குமரேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குழந்தை தெரசா, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து