முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி கலெக்டர் கே.எஸ். பழனிசாமி தொடங்கிவைத்தார்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் இன்று (08.08.2017) மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மூலம் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெறும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி   தலைமையில் நடைபெற்றது. இக்கண்காட்சியினை மாவட்ட கலெக்டர்  குத்துவிளக்கேற்றி வைத்து விற்பனையை துவக்கி வைத்து அரங்குகளை  பார்வையிட்டு தெரிவிக்கையில்.

தேசிய கைத்தறி தினம்

இந்திய திருநாட்டில், விவசாயத்தி4ற்கு அடுத்தபடியாக உள்ள நெசவுத் தொழிலினை சிறப்பிக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும் மத்திய அரசினால் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 7ம் நாளினை ‘தேசிய கைத்தறி தின” மாக அறிவித்து, அதனை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகராமான சென்னை, கலைவாணர் அரங்கில்  தமிழக முதலமைச்சர்  கலந்து கொண்டு சிறந்த நெசவாளர்களுக்கு பரிசுகள் வழங்கியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக மூன்றாவது தேசிய கைத்தறி கொண்டாட்டங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் 08.08.2017 முதல் 10.08.2017 வரை தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சிகள் நடத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறையினால் மேற்கொள்ள உத்திரவிட்டதன் அடிப்படையில்  திருப்பூர் மாவட்டத்திற்கு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் இன்று துவக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி தொடர்ந்து  3 தினங்கள் (08.08.2017 முதல் 10.08.2017 வரை)  நடைபெறவுள்ளன. ஒவ்வொரு நாளும் காலை 10.00 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும்.     

இக்கண்காட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மென்பட்டு, கோரா காட்டன், காட்டன் சேலைகள், பெட்ஷீட்கள், துண்டு வகைகள், மிதியடிகள் என சுமார் ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில்  துணிரகங்கள் வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி 20மூ தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. கண்காட்சி ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல்  இரவு 8.30 மணி வரை நடைபெறும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தனியார் நிறுவன தொழிலாளர்கள் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்கப்படுத்த வேண்டுமென கைத்தறி துறை நிர்வாகம்  மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் வ.தங்கராஜ், கைத்தறி அலுவலர் முருகையா, கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் ஜெகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து