முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செங்கோடு வட்டம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு கைத்தறி கண்காட்சி: கலெக்டர் மு.ஆசியா மரியம், துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கவிழா நேற்று (08.08.2017) நடைபெற்றது இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம், தலைமையேற்று சிறப்பு கைத்தறி கண்காட்சியினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

கைத்தறி கண்காட்சி

 

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது,

கைத்தறி தொழிலை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடவும் 2015 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 7-ம் தேதி கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வடக்கு ரதவீதியில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது இன்று 08.08.2017 தொடங்கி 10.08.2017 வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் கைத்தறி ரக ஜவுளிகளின் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு 30க்கும் மேற்ப்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட இரகங்களான கைத்தறி துண்டு ரகங்கள், வேட்டிகள், லுங்கிகள், காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம், பெட்ஷிட்கள,; அகர்லிக் சால்வைகள், பட்டுசேலைகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து வகை கைத்தறி துணிகளுக்கும் 20சதவீத தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இக்கண்காட்சியில் ரூ.7.00 இலட்சம் மதிப்புள்ள கைத்தறி ஜவுளிகள் விற்பனையாகும் என எதிர்பாக்கப்படுகிறது. கைத்தறி துணிகளை விற்பனை செய்வதன் மூலம் நாட்டின் பொருளதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக உள்ள கைத்தறி தொழிலையும், அதனை சார்ந்த பராம்பரிய கலையின் பாதுகாவலர்களாக உள்ள நெசவாளர்களையும் பாதுகாத்திடும் வகையில் கைத்தறி துணிகளை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

சிறப்பு கைத்தறி கண்காட்சியில் கலெக்டர் மு.ஆசியா மரியம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பி.சம்பூர்ணம் அவர்களுக்கு கைத்தறி ஆடைகளை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய்க்கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், திருச்செங்கோடு வருவாய் வட்டாட்சியர் பூவராகவன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் எஸ்.விஸ்வநாதன், துணி நூல் கட்டுபாட்டு அலுவலர்கள் பி.சுந்தர சிவாஜி, எஸ்.சின்னசாமி மற்றும் கைத்தறி துறை அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் விற்பனையாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து