பிரம்மோற்சவ விழாவுக்காக ரூ.9 கோடியில் ஏழுமலையானுக்கு தங்க சர்வ பூபாள வாகனம்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      ஆன்மிகம்
tirupathi 2016 11 19

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவுக்காக தேவஸ்தானம் ரூ. 9 கோடியில் தங்க சர்வ பூபாள வாகனத்தை தயார் செய்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் செப் டம்பர் மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட உள்ளது. இதில் உற்சவரான மலையப்ப சுவாமி தினமும் காலை, இரவு ஆகிய இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

இவ்விழா அக்டோபர் மாதம் 1-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாள் இரவு வழக்க மாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலை யப்ப சுவாமி, பூக்களால் அலங்கரிக் கப்பட்ட சர்வ பூபாள வாகனத்தில் பவனி வருவது வழக்கம். ஆனால் இம்முறை ரூ. 9 கோடி செலவில் தங்க சர்வ பூபாள வாகனம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, புதிதாக தயார் செய்யப் பட்ட தங்க சர்வ பூபாள வாகனத்தை நேற்று திருமலையில் உள்ள வாகன மண்டபத்தில் அதிகாரிகள் பார்வையிட்டனர். இது மிகவும் அழகான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து