வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1 கோடியே 14 இலட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழா கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      ஈரோடு
news photo

வால்பாறை மற்றும் சோலையார் அணை பகுதிகளில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு குடியிருப்பு வசதி இதுவரை செய்யப்படாதநிலையில் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இப்பணி தற்பொழுது தமிழக அரசு சார்பாக பொதுப்பணித்துறை மூலம் வால்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.57 இலட்சம் மற்றும் சோலையார் அணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.57 இலட்சம் ஆக மொத்தம் 1 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர். பிரவீன், பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் நீதிபிரியா, நகர செயலாளர் மயில் கணேசன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் தமிழக அரசு சார்பாக சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டு விழாவை துவக்கிவைத்தார்

இந்நிகழ்ச்சியில் நகர அம்மா பேரவை தலைவர் பாபுஜி, நகர பேரவை செயலாளர் கேபிள் நரசப்பன், கருமலை சௌந்தரராஜன், நடுமலை செல் கணேசன், ஷேக்கல்முடி கல்யாணசுந்தரம், நிர்வாகிகள் பாலன், சீனி மற்றும் அனைவரும் திரளாக கலந்துகொண்டனர். இதுபற்றி பொதுமக்கள் கூறும்பொழுது மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவமனை அருகிலேயே குடியிருக்க தமிழக அரசு வழிவகை செய்திருப்பதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து