முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      ஈரோடு
Image Unavailable

 

ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று (08.08.2017)  மூன்றாவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தொடங்கி வைத்து தெரிவித்ததாவது

இக்கைத்தறி கண்காட்சியானது 08.08.2017 முதல் 10.08.2017 வரை காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளது.  இக்கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 50 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், பிற மாவட்டங்களில் இருந்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் கலந்து கொண்டுள்ளன. இக்கண்காட்சியில் படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள், துண்டுகள் பருத்தி மற்றும் மென்பட்டு சேலைகள், திரைச்சீலைகள், டஸ்டர், ஜமுக்காளம், சால்வை மற்றும் வீட்டு அலங்கார துணி வகைகள் 20 சதவீத அரசு தள்ளுபடி மான்யத்துடன் விற்பனை செய்யப்பட உள்ளது. இக்கண்காட்சி மற்றும் விற்பனையில் ரூ.10.00 இலட்சம் விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு கைத்தறி துணிகளை அனைவரும் வாங்கி பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இக்கண்காட்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தெய்வநாயம், மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் சந்திரசேகரன், மேலாண்மை இயக்குநர் பா.பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் சு.பிச்சைமுத்து, உதவி அமலாக்க அலுவலர் எஸ்.ராஜகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து