முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      நீலகிரி
Image Unavailable

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி நீலகிரி மாவட்டத்தில் நான்கு இடங்களில் நேற்று நடைபெற்றது.
                                  துண்டு பிரசுரம்
ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கொடி அசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது-
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளிலும் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணியானது முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 19 கிராம ஊராட்சிகள் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மீதமுள்ள 16 கிராம ஊராட்சிகளில் திறந்தவெளிஇயல் மலம் கழிக்கும் முறை அறவே இல்லை என்ற நிலையினை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
                                      உறுதிமொழி
பேரணி லோயர்பஜார், மார்க்கெட், காபிஹவுஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை, பிரீக்ஸ் சாலை வழியாக பிரீக்ஸ் பள்ளியை அடைந்தது. பின்னர் அங்கு முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற தலைப்பில் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் தலைமையில் மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளில் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் ரேணுகா தேவி, ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் காசிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்கிருஷ்ணன், ரவிச்சந்திரன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, கிரசண்ட் பள்ளி, ஜோசப் பள்ளி, பிரீக்ஸ் பள்ளி, சி.எம்.எம்.பள்ளி உள்ளிட்ட
பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர்கள், மகளிர் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
                               குன்னூர்
இதேபோல் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் குன்னூர்  பெட்போர்டு பகுதியில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர் ஆறுமுகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மவுண்ட் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவராஜ், பாரதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பள்ளி,. புனித மரியன்னை பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
                    கோத்தகிரி
அதேபோன்று கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் கோத்தகிரி பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி நரசிம்மன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மார்க்கெட், ஜான்சன் சதுக்கம், ராம்சந்த் வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரகாஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், மகளிர் குழுவினர், அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
               கூடலூர்
கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை அடைந்தது. பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழக முதல்வர் பழனிச்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாரதியார் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து