முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அடுத்த மாதம் சீனா செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

‘பிரிக்ஸ்’ அமைப்பு

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘பிரிக்ஸ்’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை சந்தித்து பேசுவது வழக்கம். உலகளாவிய பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ள இந்த மாநாட்டில் பேசப்படும். கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை கோவாவில் இந்தியா நடத்தியது. அப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.

அடுத்த மாதம்

இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெற உள்ளது. அந்நாட்டின் சீயமன் நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சீன அரசு செய்து வருகிறது. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அடுத்த மாதம் சீனா செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தியா- சீனா இடையே பரஸ்பர உறவை மேம்படுத்தும் நோக்கில் அவரது பயணம் அமையும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

டோக்லாம் பிரச்சனை

கடந்த மாதம் பிரதமர் மோடி ஹம்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டில் பேசுகையில், ‘‘சீன அதிபர் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் முன்னேற்றமும், ஒற்றுமையும் மேலும் வலுப்படும்’’ என்று புகழாரம் சூட்டி இருந்தார். அது போல பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியாவின் பங்களிப்பை சீன அதிபர் பாராட்டி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தியா, பூடான், சீனா எல்லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவமும் சீன ராணுவமும் நேருக்கு நேர் மோதும் நிலையில் நிற்பது பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்திய ராணுவம் 2 வாரத்துக்குள் டோக்லாம் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் சீன பயண அறிவிப்பு எல்லை பதட்டத்தை தணிக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து