முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டியில் நாகவள்ளியம்மன் ஆலய பால்குட விழா

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி திருவள்ளுவர் நகரில் ஊள்ள அருள்மிகு நாகவள்ளியம்மன் இலயத்தில் புதன்கிழமை ஆடி பௌர்ணமி பால் குட விழா சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகம்

 கும்மிடிப்பூண்டி திருவள்ளுவர் நகரில் எழுந்தருளி உள்ள அருள்மிகு நாகாத்தம்மன் இலயத்திற்கு கடந்த ஜூன் 5இம் தேதி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், இந்த ஆலயத்தில் ஆடி பௌர்மணி பால்குட விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை ஓட்டி கடந்த வியாழக்கிழமை முதல் இலயத்தில் நாகவள்ளி அம்மனுக்கு மணி மாலை போடும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து பால்குட விழாவை ஓட்டி காப்பு கட்டிய பக்தர்கள் நாகவள்ளியம்மனை வேண்டி பால்குடம் சுமந்தனர். கும்மிடிப்பூண்டி மண்ணடி தெருவில் உள்ள துலுக்காணத்தம்மன் இலயத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து நாகவள்ளியம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து நாகவள்ளியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பிறகு தீபாரதனை, அன்னதானம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாகவள்ளியம்மனுக்கு தாலாட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முனியம்மாள் ஊள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து