அண்ணாநகர் பகுதியில் மாமானரை கத்தியால் தாக்கிய மருமகன் உட்பட 4 பேர் கைது

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      சென்னை

சென்னை, அண்ணாநகர், மேல் நடுவாங்கரை, பஜனை கோவில் தெரு, எண்.60 என்ற முகவரியில் ஆப்பிள்ராஜ், /42, என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக கார் வைத்து தொழில் செய்து வருகிறார்.

 ஆஜர்

ஆப்பிள் ராஜ் (08.08.17) இரவு சுமார் 9.00 மணியளவில் எம்.ஜி.ஆர் காலனி, 7 வது மெயின்ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு தனது அக்கா மகன் சிவகுமார் அவருடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துள்ளார். உடனே ஆப்பிள்ராஜ் தனது அக்கா மகன் சிவக்குமாரிடம் வீட்டிற்கு செல்லும்படி கூறி கண்டித்துள்ளார். குடிபோதையில் இருந்த சிவகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது மாமா ஆப்பிள்ராஜின் முகத்தில் கத்தியால் தாக்கியுள்ளார்.


காயமடைந்த ஆப்பிள் ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாக ஆப்பிள்ராஜ் கே-4 அண்ணா நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அண்ணாநகர் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.சிவகுமார், /23, நடுவாங்கரை 2.கோகுல்ராஜ், /23, திருமங்கலம் 3.கௌதம், /23,, மேல்நடுவாங்கரை 4.கோவிந்தராஜ், /23, அண்ணாநகர் ஆகிய நான்கு பேர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1 கத்தி மற்றும் 3 உருட்டுக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து