முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகுளத்தூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்;டர் வழங்கினார்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூரில் நடைபெற்ற மக்கள்தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், காக்கூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 264 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட  உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றிற்கு உடனடி தீர்வு காணும் விதமாக மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் முதுகுளத்தூர் வட்டம், காக்கூர்; கிராமத்தில் நடைபெறும் இம்முகாம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு மொத்தம் 212 முன்மனுக்கள் பெறப்பட்டன.  மேலும் இன்று நடைபெறும் இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 264 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  இதுதவிர, காக்கூர்; மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரூ.26.14  லட்சம் மதிப்பீட்டில்  5 அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்க பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.  விரைவில் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
 மேலும் மாவட்டத்தில்  முதலமைச்சரின் சூரிய மின்சக்தி விளக்குடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ரூ.916 லட்சம் மதிப்பீட்டில் 509 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கி பணிகள் துவக்கப்பட்டுள்ளது.  அதேபோல பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.103 கோடி மதிப்பீட்டில் 6075 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. வறட்சிக்கால குடிநீர் பணிகளுக்காக ஊரகப்பகுதிகளில் ரூ.12.55 கோடி மதிப்பில் 1118 பணிகளும், நகர்ப்பகுதி குடிநீர் தேவைக்காக ரூ.3.06 கோடி மதிப்பில் 160 பணிகளும் ஆக மொத்தம் இதுவரை ரூ.18.47 கோடி மதிப்பில் 1340 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 1192 நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் உள்ள சிறுபாசன கண்மாய்களை தாய் - ஐஐ திட்டத்தின் கீழ் மேம்பாடு செய்திட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.  இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-2017-ஆம் ஆண்டுக்கான தாய் திட்டத்தின் கீழ் ரூ.9.77 கோடி மதிப்பில் 42 சிறுபாசன கண்மாய்களை தூர்வாரி ஆழப்படுத்தி பாசன வசதிக்காக மடைகள் மற்றும் கழுங்குகளை புனரமைப்பு செய்திட அனுமதிக்கப்பட்டு அனைத்து பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் இதர உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்காக ரூ.12.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் துவங்கப்படவுள்ளன.
 விவசாயிகள் தங்கள் விலை நிலங்களின் மண்ணின் தன்மையை செறிவூட்டும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4586 நீர்நிலைகளில் உள்ள களிமண் படிமங்களை எடுத்துக்கொள்ள மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்யப்பட்டு, இதுவரை 18436 க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற மனுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, ஊரணிகளில் படிந்துள்ள வண்டல் களிமண் படிவங்களை 22.68 லட்சம் க்யுபிக் மீட்டர் அளவிற்கு எடுத்து பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் (பொ) அமிர்தலிங்கம், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணின், மாவட்;ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், உள்பட  பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து