மரங்களை வெட்டி அகற்றுவதற்கு மாவட்ட மரவெட்டு குழுக்கூட்டத்தின் அனுமதி பெற்று அகற்றப்பட வேண்டும் கலெக்டர் சிவஞானம் தகவல்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      விருதுநகர்
vnr news

 விருதுநகர் .-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலைக்கிராமம் உள்ள பகுதிகளில், மாவட்ட மரவெட்டு (நெறிப்படுத்துதல்) குழுக் கூட்டம்  மாவட்ட மரவெட்டு (நெறிப்படுத்துதல்) குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மலைப்பகுதி மரங்கள் பாதுகாப்புச் சட்டம்-1955-ன்படி   வீடுகள் மற்றும் நகர்புற வளர்ச்சி துறையால் பிறப்பிக்கப்பட்ட  அரசாணை  எண்.49  நாள் 24.03.2003-ல்  விருதுநகர் மாவட்டத்தில்  ஸ்ரீவில்லிபுத்தூர்; வட்டத்தில் உள்ள 6 கிராமங்கள்  (வாழைக்குளம், வெங்கடேஸ்வரபுரம், மகாராஜபுரம், வத்ராப், கான்சாபுரம், பிள்ளையார்நத்தம்) மற்றும் இராஜபாளையம் வட்டத்தில் உள்ள 2 கிராமங்கள் (முத்துசாமிபுரம்,  ்சலூர்)  வரையறுக்கப்பட்ட மலைப்பகுதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும்,  மேலும் தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம்-1949-ன்படி தமிழ்நாடு வனத்துறையால் 26.11.1986-ல்  வெளியிடப்பட்ட விருதுநகர் மாவட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள  மகாராஜபுரம்;, சுந்தரபாண்டியபுரம், புதுப்பட்டி, வாழைக்குளம், தேவேந்திரி, வத்ராப், வடக்கு வெங்காநல்லூர், சம்மந்தபுரம் மற்றும் அயன்கொல்லங்கொண்டான் ஆகிய கிராமங்களின்  சில தனியாருக்குச் சொந்தமான புல எண்களும், மேற்படி சட்டத்தின் வரையறைக்குட்படுத்தப்பட்டுள்ளன என்றும், 
எனவே மேற்படி கிராமங்களில் உள்ள புலங்களை கிரையம் பெற விரும்பும் நபர்கள் தாங்கள் கிரையம் பெற உத்தேசித்துள்ள புல எண்ணானது மேற்படி சட்டத்தின்கீழ் உட்கவரப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து, உட்கவரப்படவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு அதன்பின்னரே நில பரிவர்த்தனைகளில் ஈடுபடவேண்டும் என்றும்,   மேற்படி கிராமங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி அகற்றுவதற்கு மேற்படி குழுக்கூட்டத்தின் அனுமதி பெற்ற பின்னரே அகற்றப்பட வேண்டும் என்பதால், மேற்படி கிராமங்களில் தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற விரும்பும் பட்டாதார்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவிற்கு விண்ணப்பம் அளித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்றும், மேற்படி குழுக்கூட்டத்தின் அனுமதியின்றி மரங்களை வெட்டும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தெரிவித்தார்கள்.


இக்கூட்டத்தில், மாவட்ட வன உயிரின காப்பாளர்  அசோக்குமார், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர்  டிக்ரோஸ் மோகன சுந்தர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்   அன்புநாதன், வட்டாட்சியர்கள்  சரவணன் (இராஜபாளையம்),  தி.மு.சரஸ்வதி ( திருல்லிபுத்தூர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து