திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 12ம் தேதி நடக்கிறது

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் திருவாரூர் வட்டத்தில் ஆ}ர் கிராமத்தில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் வட்டத்தில் கொல்லாபுரம் கிராமத்தில் திருவாரூர் பொது விநியோக திட்ட சரக துணைப் பதிவாளர் தலைமையிலும், குடவாசல் வட்டத்தில் மணப்பறவை கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் வட்டத்தில் கீழவிடையல் கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டத்தில் அனுமந்தபுரம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மன்னார்குடி வட்டத்தில் களப்பால் கிராமத்தில் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர்; தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் பாமணி கிராமத்தில் மன்னார்குடி சரக பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் தலைமையிலும் கூத்தாநல்லூர் வட்டத்தில் பழையனூர் கிராமத்தில் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிட் துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர்; தலைமையிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறை கேட்கும் கூட்டம் 12.08.2017 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

 எனவே, தொடர்புடைய பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவைகள் குறித்தும், கடை மாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்த தங்களது கோரிக்கை மனுக்களை 12.08.2017 அன்று நடைபெறவுள்ள குடிமைப் பொருள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மேற்காணும் அலுவலர்களிடம் அளித்து பயன் பெறலாம் என திருவாரூர், மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து