முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் கு.ராசாமணி தகவல்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      திருச்சி

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்க தமிழக அரசின் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். என திருச்சி கலெக்டர் கு.இராசாமணி. தெரிவித்துள்ளார்.

 கடனுதவி

திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டு காலமாக வசித்து வரும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான சிறு தொழில்களை தொடங்கிட மானியத்துடன் கூடிய ரூபாய் 10 இலட்சம் வரையிலான வங்கிக் கடனுதவி பெறும் வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கிட அதிக பட்ச வங்கிக் கடனுதவி வியாபாரத்திற்கு ரூபாய் 1 இலட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் 3 இலட்சமும் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் 10 இலட்சமும் வழங்கப்படும். இதற்கான தமிழக அரசு மானியம் திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு ஆகும். அதிகபட்ச மானியம் ரூபாய் 1 இலட்சத்து 25 ஆயிரம் ஆகும். இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் நேரடி விவசாயம் செய்ய இயலாது.

விண்ணப்பங்களைஇணையதள முகவரியில் விண்ணப்ப நகலினை பதிவிறக்கம் செய்து இரண்டு நகல்களில் தேவைப்படும் அனைத்து ஆவணங்களுடன் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, திருச்சிராப்பள்ளி – 620 001 என்ற முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்திட மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு வருதல் அவசியமில்லை. திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலோ அல்லது 0431 – 2460331, 0431 – 2460823 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி. தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து