முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி : கலெக்டர் கு.கோவிந்தராஜ் தொடங்கிவைத்தார்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      கரூர்
Image Unavailable

கரூரில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு 08.08.2017 இன்று முதல் 10.08.2017 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள தேசிய கைத்தறி தின கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ். தொடங்கிவைத்து பார்வையிட்டார்கள் மேலும் பஞ்சாப் நேசனல் வங்கியின் முத்ரா கடன் திட்டத்தின் வாயிலாக 30 பயணாளிகளுக்கு தலா ரூ-50,000 கடனுதவி வழங்கி பேசினார்.

 கலெக்டர் பேச்சு

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, நலிவடைந்த நெசவாளர்களின் வாழ்ககை தரத்ததை மேம்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதிலுமுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள்,வேட்டிகள்,படுக்ககை விரிப்புகள்,திரை சீலைகள் , துண்டுகள், போர்வைகள்,கைலிகள் உள்ளிட்டவை புதிய ரகங்களிலும் வடிவிலும்,மேம்பட்ட தரத்திலும் சிறப்பு வண்ணங்களிலும் காட்சிக்கு வைத்தள்ளனர்.

கரூர் மாவட்டத்திற்கு ரூ-20 இலட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் கரூர் சரகத்தில் உள்ள நெசவாள்ர்களின் தொழிலை மேம்படுத்த பஞ்சாப் நேசனல் வங்கியுடன் இணைந்நு தலா ரூ-50,000 கடனுதவியும் வழங்கப்படுகிறது.இந்த கடனுதவி பெறும் நெசவாளர்கள் உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தி தங்கள் வாழ்வில் வளர்ச்சி பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும்,கரூர் மாவட்ட பொதுமக்கள் கைத்தறி ஆடைகளை பெருமளவு வாங்கி பயண்படுத்தி நெசவாளர்கள் வாழ்வில் ஏற்றத்ததை உண்டாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவிஇயக்குநர் சி.வெற்றிச்செல்வன்,கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, பஞ்சாப் நேசனல் வங்கியின் முதன்மை மேலாளர் சுரேஸ், கைத்தறி ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து