முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுக்கு குஜராத்தில் ‘மூக்கறுப்பு’- வைகோ பேட்டி

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, குஜராத் மாநில மேல்சபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அகமது படேல் வெற்றி பெற்றதால், பாரதிய ஜனதாவுக்கு மூக்கறுப்பு ஏற்பட்டதாக வைகோ விமர்சித்து உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை தாயகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஜனநாயகத்திற்கு ஆபத்து விளைவிக்க கூடிய நிலையை மத்திய அரசு செய்கிறது. மோடி அரசு ஜனநாயகத்தை நசுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வி‌ஷம் எனும் நஞ்சை கலக்கிறார்கள். இதற்கு தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் பதில் கொடுத்து இருக்கிறது. குஜராத் மாநில மேல்-சபை தேர்தலில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிருதிரானி ஆகியோர் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் சார்பில் அகமது படேல் நிறுத்தப்பட்டார். இதில் பாரதிய ஜனதா வழக்கமான பாணியில் தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டது. அவர்களுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் சாய்ந்து விடும் என நினைத்தோம். ஆனால் சரியான முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்ததன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு ‘மூக்கறுப்பு’ ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு செல்வாக்கு கிடையாது. உதாரணத்திற்கு அருணாசல மாநிலத்தில் தில்லுமுல்லு செய்து பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடித்தது. இப்போது சொந்த மாநிலத்தில் மூக்கறுப்பு பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பா.ஜ.க. வின் பார்வை தமிழகத்தின் மீது உள்ளது. தமிழகத்தின் மீது பருந்து பார்வையை வைத்துள்ளது.

பா.ஜ.க. குறுக்கு வழியில் இங்கு ஆட்சி செய்ய நினைத்தால் அது நடக்காது. திராவிட இயக்கங்களை ஒதுக்கி விட்டு அரசியல் செய்ய நினைக்கும் பா.ஜ.க.வின் செயலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். விவசாயிகள் நிலத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் 110 கிணறுகளை தோண்ட திட்டமிட்டுள்ளது. அதற்காக ‘ஜெம் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக விவசாயிகள் என்ன போராட்டம் நடத்தினாலும் எங்களுக்கு கவலை இல்லை என்ற நிலையில் மத்திய அரசு தமிழக டெல்டா விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் மத்திய அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அழிவைத் தரும் இதை மாநில அரசு தட்டி கேட்க வேண்டும். ஆனால் தற்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு பாசிச அரசாக இருக்கிறது. அதை தடுக்க வேண்டிய நேரத்தில் தடுக்க வேண்டும். இதை எதிர்த்து மாணவ, மாணவிகளை திரட்டி போராட்டம் நடத்துவேன். இதை மீறி ஜெம்ஸ் நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைக்க முயற்சி செய்தால் அதை தடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து