தமிழகம், புதுவையில் கனமழை வாய்ப்பு

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Meteorological Center 2017 02 22

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தென்னிந்திய பகுதியில் வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில், மேற்கு திசைக் காற்று வலுப்பெற்றுள்ளது. மேலும் லட்சத்தீவு பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மாநகரைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.


இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து