முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மாவட்டத்தில், அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

 

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.

 கைத்தறிகண்காட்சி

சிறப்பு கைத்தறி கண்காட்சியினை தொடங்கி வைத்து கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் விதமாகவும், நெசவாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், சுதேசி இயக்கத்தினை நினைவு கூறும் விதமாகவும், 2015 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம், ஆகஸ்ட் மாதம் 7ம் தேதியினை தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது. முதலாவது தேசிய கைத்தறி தினத்தினை இந்திய அளவில் அதிக நெசவாளர்கள் இருக்கும் தமிழகத்தில் அதன் தலைநகரான சென்னையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து, நெசவாளர்களின் உழைப்பு, தியாகம், தேசிய வளர்ச்சியில் நெசவாளர்களின் பங்கு மற்றும் அனைத்து மக்களின் மானங்காக்கும் சிறந்த பணியினையும் பாராட்டி, சிறந்த வடிவமைப்புகள் மற்றும் சிறந்த நெசவாளர்களுக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்கள். ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்கள். 2016 ஆம் ஆண்டு தேசிய கைத்தறி கண்காட்சி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கொண்டாடப்பட்டது.

 மேலும் இந்த 2017 ஆம் ஆண்டிலும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை சார்பிலும், பொதுமக்களின் பேராதரவோடும், ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி தினத்தினை தமிழகத்தில் வாழும் அனைவரும் தங்களின் பொருளாதாரத்திற்கேற்ப, தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்த கைத்தறி ஆடைகளை வாங்கி, புத்தாடை அணிந்து ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கும்பகோணம் மற்றும் திருவாரூர் சரகங்களின் சார்பில் 08.08.2017 முதல் 10.08.2017 வரை மயிலாடுதுறை அட்மாஸ் திருமண அரங்கிலே மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி நடத்தப் படுகிறது. தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கென நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் தி;ட்டம், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டம், நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம், மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டம், சிக்ஷா சகாயோக் யோஜனா திட்டம், நெசவாளர் நல்வாழ்வு காப்பீடு திட்டம், விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், நெசவாளர்களுக்கு ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், தள்ளுபடி மானிய திட்டம், நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வங்கும் திட்டம், சிறந்த நெசவாளர்களுக்கு விருது வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு நெசவுத் திட்டம், மின்மோட்டார் பொருத்திய தார் சுற்றும் இயந்திரம் வழங்கும் திட்டம், ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் போன்ற அரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

 பொதுமக்கள் வாரம் இருமுறை கைத்தறி ஆடைகளை பயன்படுத்தினால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்." என தெரிவித்தார். இவ்வழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்பவுன்ராஜ்(பூம்புகார்), பி.வி.பாரதி(சீர்காழி), வி.ராதாகிருஷ்ணன்(மயிலாடுதுறை), கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் மு.இராசேந்திரன், திருபவனம் பட்டு, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெ.பெரியசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து