அரியலூரில் .எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் : அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      அரியலூர்
pro Ariyalur

 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வட்டார சுகாதார நிலையத்தில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பாக கண் சிகிச்சை முகாம் முகாம் மாவட்ட கலெக்டர் க.லட்சுமிபிரியா, தலைமையில் நடைபெற்றது.

 கண்சிகிச்சை முகாம்


இம்முகாமினை அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்கள்.ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.இம்முகாமில் 1221-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, 97- மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முகாமினை துவக்கி வைத்து, தமிழக அரசு தலைமைக் கொறடா பேசியதாவது :-

பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் செயல்படுத்திய ஏழை, எளியோர் நலன் காக்கும் ஏராளமான நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 23.08.2017 அன்று அரியலூரில் சிறப்பாக நடைபெறவுள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிச்சாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்கள்.

விழாவிற்கான ஏற்பாட்டுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் மாணவ, மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். திருமானூரில் ஏழை, எளியோருக்காக பொது சுகாதாரத்துறையின் சார்பில் நேற்று (09.08.2017) நடைபெறுகிற கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து வருகிறார்கள். இவர்களில் அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோரை பரிசோதனையில் கண்டறிந்து, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளனர். மக்களுக்கு பயன்தரும் இந்த சிறப்பான முகாமினை ஏற்பாடு செய்த மருத்துவம், ஊரக நலப்பணிகள், பொது சுகாதாரத்துறையினரை பாராட்டுகிறேன் என தமிழக அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் பேசினார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மருத்துவர்.ஹேமசந்த்காந்தி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன்;, இணை இயக்குநர் மருத்துவம் நலப்பணிகள் மருத்துவர்.செல்வராஜன், கண் மருத்துவர்;.கொளஞ்சிநாதன், துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் மருத்துவர்.மணிவண்ணன் திருமானூர், மருத்துவர்.ஆர்.மேகநாதன் செந்துறை, மருத்துவாகள் மருதுபாண்டியன், சதீஸ்குமார், அரியலூர் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம் மற்றும் ஏராளமான பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதியவகை ஸ்பாஞ்ச்

கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஓலியோ எனப்படும் இந்த ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

குரூப் காலிங் வசதி

மைக்ரோசாப்ட் ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் போன்றவற்றில் அமைந்துள்ள குரூப் காலிங் வசதி தற்போது பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிலும் அறிமுகப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.ஃபேஸ்புக் பக்கத்தில் குரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில் க்ரூப் காலிங் செய்தால் எளிதாக நண்பர்களுடன் உரையாடலாம். வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் இரண்டுமே இந்த குரூப் காலிங் ஆப்ஷனில் செய்ய இயலும்.

நம்பர் ஒன்

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ்.  அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரராக இவர் ஆக உள்ளார். 2௦16-ம் ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலர். 2009-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 11% உயர்ந்து வருகிறது.

மனிதர்களை மிஞ்சும் ரோபோ

ரோபோகள் மருத்துவர்களால் செய்ய முடியாத பல செயல்களை நொடிப் பொழுதில் செய்து முடித்து விடுகிறது. அமெரிக்காவில் உள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று, 2.5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ரோபோவினை வடிவமைத்துள்ளனர். பொதுவாக மூளை அறுவை சிகிச்சை செய்ய மனிதர்களால் குறைந்தது 2 மணி நேரமாகும். ஆனால் அதே அறுவை சிகிச்சையை வெறும் 2.5 நிமிடத்தில் செய்யக்கூடிய திறன் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரோபோ. மேலும் சி.டி ஸ்கேன் தொழில்நுட்பத்தில் மூளையின் பகுதிகளை பிரித்து அறியக்கூடிய திறனையும் இந்த ரோபோ பெற்றுள்ளது. மூளை அறுவை சிகிச்சையில் மட்டுமல்ல, இடுப்பு தொடர்பான ஆபரேஷன்களிலும் இந்த சாதனம் பயன்படுத்தபடுகிறது.

வித்தியாசமான தீர்ப்பு

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையைக் கடித்த நாய் ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் அசிஸ்ட்டென்ட் கமிஷனர் ராஜா சலீம், இந்த மரண தண்டனையை விதித்துள்ளார். நாயின் உரிமையாளர், இந்த தண்டனையை எதிர்த்து எந்தக் கோர்ட்டுக்கும் போகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முருங்கை நல்லது

முருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிட்டால், ரத்த  அழுத்தம் கட்டுகுள் இருக்கும். சர்க்கரை வியாதி வராமல் பாதுகாக்கும். தூக்கமின்மையை போக்கும். மூட்டு இணைப்புகளில் வரும் வலியை போக்கும். செல் சிதைவை தடுக்கும். புற்றுநோய் வரவிடாமலும் தடுக்கும். மேலும் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

கூகுள் போட்டோ

கூகுள் நிறுவனத்தின் பிரபல ஆப்-ஆன கூகுள் போட்டோ, பிளே ஸ்டோரில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். பிளே ஸ்டோரில் வெளியான இரண்டு ஆண்டுகளில் கூகுள் போட்டோ ஆப் இந்த சாதனையை படைத்துள்ளது. கூகுள் போட்டோ ஆப்பில் அன்லிமிடெட் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படுவதோடு, பல்வேறு புதிய வசதிகளுக்கான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில்....

பூமியை போன்று விவசாயம் செய்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கூறும் நாசா விஞ்ஞானிகள் அங்கு விவசாயம் செய்வதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர். பசுமைகுடில் தொழில்நுட்பம் மூலம் விண்வெளி வீரர்கள் தங்கிருக்கும் அறைகளில் விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வைட்டமின் டி

நமது உடலில் வைட்டமின் டி குறைந்தால் மனஅழுத்தம், உடல் பருமன் முதுகுவலி , மூச்சிரைப்பு , உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே வைட்டமின் டி உள்ள உணவு பொருட்களான மீன் வகைகள், இறைச்சி, பால் மற்றும் பால் பொருட்கள் தானிய வகைகள் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்றவை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

பொறாமை உணர்வு

பண்டிகைக் கொண்டாட்டம், விடுமுறைக் காலங்களில் எடுத்த புகைப்படங்களைப் நாம் ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யும் போது, அதைப் பார்க்கும் முக நூல் நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமை உணர்வு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பேச மட்டும் இல்ல

வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜை அனுப்பி விட்டால் அதனை டெலிட் செய்யவோ, எடிட் செய்யவோ முடியாது. இது குறித்த சோதனை முயற்சி ஐபோன்களில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் அனுப்பிய மெசேஜை எடிட் செய்தால், ரிசீவரின் மொபைலிலும் மாற்றப்பட்டுவிடும். டெலிட் செய்தால், ரிசீவரின் மொபைலிலும் அந்த மெசேஜ் டெலிட் ஆகிவிடும். விரைவில் வாட்ஸ்ஆப்பில் இந்த ஆப்ஷன்ஸ்கள் இணையும்.

எல்.இ.டி ஸ்டிக்

மரத்தாலான ஸ்டிக் ஒன்றில் எல்.இ.டி கதிர்களை உமிழும் விளக்குகளைப் பொருத்தி காற்றில் படம் வரையும் அதிசயத்தை டிஐஒய் நெட்வொர்க் எனும் நிறுவனம். இந்தக் கருவிக்கு பிக்செல் ஸ்டிக் என்று பெயரிட்டுள்ளனர். பார்ப்பதற்கு மேஜிக் போல தெரிந்தாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது சாத்தியமாகியுள்ளது.