முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்தை எதிர்த்து வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசியல் சட்டம் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ  அந்தஸ்து அளிக்கப்படுகிறது. இதை எதிர்த்து குமாரி விஜயலட்சுமி ஷா என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது தொடர்பான மனுவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டம் 370-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இதேமாதிரியான வழக்கை ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கிவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குமாரி விஜயலட்சுமி ஷா, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான மனுவில் ஜம்மு-காஷ்மீருக்கு விசேஷ  அந்தஸ்து அளிக்கும்  370-வது சட்டப்பிரிவை செல்லாது, சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று அறிவிக்க வேண்டும் என்று ஷா கூறியிருந்தார். மேலும் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு  தவறுதலாக பின்பற்றியிருப்பதோடு தவறாகவும் படிக்கப்பட்டுள்ளது. 1957-ம் ஆண்டு மாநிலத்தால் அமைக்கப்பட்டிருந்த சட்டசபை கலைக்கப்பட்டவுடன் தற்காலிக சட்டப்பிரிவு 370 தானாகவே காலாவதியாகிவிட்டது என்றும் ஷா அந்த மனுவில் மேலும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு 370-வது பிரிவு குறித்தும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ அந்தஸ்து அளிப்பது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி  ஜே.எஸ்.ஹேகர் மற்றும் நீதிபதி ஆதர்ஷ் கோயல்,டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து