நீட் தேர்வு விவகாரத்தில் இரண்டொரு நாளில் நல்ல தீர்வு வரும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      தமிழகம்
vijaya-bhaskar 2017 6 3

சேலம் : நீட் தேர்வு விவகாரத்தில் இரண்டொரு நாளில் நல்ல முடிவு வரும் என சேலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அழுத்தம்

நீட் விவகாரத்தில் எந்த குழப்பமும் இல்லை. தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். நேற்று முன்தினம் கூட நாங்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து விட்டு வந்து இருக்கிறோம். மத்திய அரசு கூட இதை செய்வதற்கு தயாராக இருக்கிறது. இதில் கொஞ்சம் சட்ட சிக்கல்கள் இருக்கிறது. மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு அதை உள்வாங்கி கொண்டு செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.
உறுதியாக இருக்கிறோம்


கடந்த ஓராண்டு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதே மாதிரி தொடர்ந்து இந்த ஆண்டும் ஒரு விதிவிலக்கை கேட்பதற்கு உண்டான சட்ட வழிமுறைகளை மத்திய அரசு சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் சொல்லி உள்ளோம். ஆகஸ்ட் 30-ந்தேதிக்குள் நாங்கள் அட்மி‌ஷன் முடிக்க வேண்டும். நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இரண்டு ஒரு நாட்களில் நல்ல முடிவு வரும்.

சிறப்பு அனுமதி ...

சி.பி.எஸ்.இ. மாணவர்களும் நம்முடைய மாணவர்கள். மாநில பாட திட்டத்தில் படித்தும் வரும் மாணவர்களும் நம்முடைய மாணவர்கள். மாணவர் சமுதாயத்தையும், பெற்றோர்களிடத்திலும் குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தெளிவாக சொல்கிறேன். இரண்டொரு நாள் தயவு செய்து காத்திருங்கள். அரசு தன்னுடைய பகீரத முயற்சியை உச்சபட்ச அழுத்தத்தையும் மத்திய அரசிடம் கொடுத்து இருக்கிறோம். மத்திய அரசும், பாரத பிரதமரும், மத்திய மந்திரிகளும் நீட் விவகாரம் தொடர்பாக கனிவோடு பரிசீலனை செய்து கொண்டு இருக்கிறார்கள். சட்ட சிக்கல்கள் இருக்கிறது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஏற்றுக்கொண்டால் கூட தமிழ்நாட்டிற்கு சிறப்பு அனுமதி கொடுப்பது குறித்து அவர்கள் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள்

இரண்டொரு நாளில் ...
என்ன வாய்ப்பு இருக்கிறோ? இரண்டொரு நாளில் தெரியவரும். தாமதபடுத்தி விடமாட்டோம். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. இந்த வழக்கும் முடிவும் இரண்டொரு நாளில் தெரியவரும். அதிகபட்சம் எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. 6 நாள் தான் மொத்த கவுன்சிலிங். 6 நாளில் கவுன்சிலங்கை முடித்து விடுவோம். ஆயிரம் எம்.பி.பி.எஸ். சீட் இந்த ஆண்டு வாங்கி இருக்கிறோம். எல்லா இடத்தையும் நிரம்பி விடுவோம். நல்ல முடிவு வரும் என நம்பிக்கையோடு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து