முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் கலந்தாய்வு நாளை நிறைவடைகிறது: 97 ஆயிரம் மாணவர் சேர்க்கையிடங்கள் காலி

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளையுடன் முடிவடைகிறது. இன்றைய நிலையில் 97 ஆயிரம் சேர்க்கையிடங்கள் காலியாக உள்ளன.

தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைத்தனர். பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஒரு லட்சத்து 41 ஆயிரம் 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 22-ல் வெளியிட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தொழில்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 17,18-ம் தேதி நடைபெற்றது. மாற்றுதிறனளிகளுக்கான கலந்தாய்வு 19-ம் தேதியும், விளையாட்டு பிரிவு வீரர்களுக்கான கலந்தாய்வு 21-ம் தேதியும் நடைபெற்றது.

பி.இ.,பி.டெக் படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வில் கலந்துக் கொள்வதற்காக 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 197 பேர் தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரிகள் 13, மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள் 3, தனியார் பொறியியல் கல்லூரிகள் 486 என 518 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 692 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொதுப்பிரிவு கலந்தாய்வின் மூலம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 339 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கலந்தாய்விற்கு 8 ம் தேதி வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 270 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 75 ஆயிரத்து 117 மாணவர்கள் பொறியியல் படிப்பினை தேர்வு செய்துள்ளனர். இவர்களில் 37 ஆயிரத்து 398 பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் ஆவார்கள். 40 ஆயிரத்து 634 மாணவர்கள் கலந்தாய்விற்கு வருகை தரவில்லை. கலந்தாய்விற்கு வராதவர்களின் சதவீதம் 34.95 ஆக உள்ளது. மேலும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நேற்று நடைபெற்ற கலந்தாய்வின் 7 பிரிவில், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் 1019 இடங்களும், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பொறியியல் கல்லூரிகளில் 5 இடங்களும், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 95,955 இடங்களும் உட்பட 96,979 இடங்கள் காலியாக இருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து